Tuesday, May 20, 2014

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களைக் கனடா புறக்கணித்ததை உறுதிப்படுத்தினார் வெளிவிவகார அமைச்சர்!


News Serviceமாத்தறையில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கனேடிய பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை என்பதை கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட்டும் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களையும் கனடா பகிஷ்கரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை விடவும் நல்லிணக்க முனைப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச அழுத்தங்களுக்கு அடி பணிந்து யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை நிறுத்தப் போவதில்லை எனவும், ஆண்டு தோறும் நிகழ்வுகள் நடைபெறும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment