விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் கடமையாற்றிய இசைப்பிரியா இராணுவ
காவலரண் முன்னால் பிறிதொரு போராளிப் பெண் என சந்தேகிக்கப்படும் ஒருவருடன்
உயிரோடு உள்ள புகைப்படங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறுதி
முடிவு எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சனல் 4
தொலைக்காட்சி ஏற்கனவே இவ்வாறான பல புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில்
அவற்றின் உண்மைத் தன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு
தொடர்ந்தும் ஆய்வுகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளது.இந்தநிலையில், இந்த புகைப்படங்கள் தொடர்பிலும் அதில் கவனம் செலுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார். குறித்த தொலைகாட்சியானது ஏற்கனவே பல புகைப்படங்களை ஆதராங்கள் இன்றி போலியாக முனவைத்திருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கும் என தாம் நம்புவதாகவும் விசாரணையின் இறுதியில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
போலி ஆவணத்தை கொண்டு இராணுவத்துக்கு அபகீர்த்தியை ஏற்ப-டுத்தும் விதமாக தொடர்ச்சியாக இவ்வாறான போலி புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்படுவதாக குறிப்பிட்ட பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இவ்வாறான புகைப்படங்களின் உண்மைத் தனமைக் குறித்து தொடர்ந்தும் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிட்டார். ஏற்கனவே பாதுகாப்பு தரப்பு சனல் 4 வீடியோ ஆதரங்களை விஷேட ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அந்த ஆய்வினுள் இந்த புகைப்படங்கள் தொடர்பிலான விடயமும் உள்ளடங்கியிருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக படையினரால் இசைப்பிரியா மீட்கப்பட்டு அழைத்து வருவது போன்ற காட்சிகளை சனல் 4 வெளியிட்டிருந்தது. எனினும் இறுதி யுத்-தத்தின் போது படையினருடனான மோதலில் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந் நிலையிலேயே இசைப் பிரியா படையினரின் காவலரண் ஒன்றின் முன்னிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment