இன்று காலை 11 மணியளவில் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் தபால்
நிலையத்தின் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு பெரியார் விடுதலை திராவிடர்
கழகத்தின் தலைவர் கோகுல் காந்தி நாத் தலைமை தாங்கினார், இந்தியப் பூரான்கள்
இயக்கத் தலைவர் போன்ஸ் ரமேஷ், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, தமிழ்
தமிழர் இயக்கம் மகேசு, அலைகள் இயக்கம் பாரதி ஆகியோர்கள் முன்னிலை
வகித்தனர்.
முன்னதாக தலைமை செயலகத்திலிருந்து ஒன்று கூடி பேரணியாக வந்து இந்தி திணிப்புக்கு எதிராகவும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் ஆசிரமம் தபால் நிலையத்தில் கோஷங்கள் எழுப்பினர். பிறகு கையில் மறைத்துவைத்திருந்த கருப்பு மைகளை எடுத்து இந்தியில் உள்ள பெயர் பலகையை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் 15 பெரியக்கடைபோலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment