Friday, June 27, 2014

இலங்கையில் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வில்லியம் ஹேக் கோரிக்கை

சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானியா மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு அமைய இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நியமித்துள்ளார்.

இந்த விசாரணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று நிபுணத்துவ ஆலோசகர்களை நவனீதம்பிள்ளை நியமித்துள்ளார்.

நிபுணத்துவ ஆலோசகர்களை நியமித்தமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைகளுக்கு பிரித்தானியா பூரண ஆதரவளி;க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாக இந்த விசாரணைகளை நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான தலையீடுகளும் இன்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு பிரித்தானியா பூரண ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.source:pathivu

No comments:

Post a Comment