அமெரிக்கா ஆனுப்பவுள்ளதாக கூறிய ‘ராணுவ ஆலோசகர்கள்’, ஈராக்கின் பாக்தாத் நகரை இன்றிரவு
வந்தடைவார்கள் என கூறப்பட்டுள்ள நிலையில், ஈராக்கில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யும் சி.என்.என்.
டி.வி சேனல், “பாக்தாத் நகரை கைப்பற்றுவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ்
தீவிரவாத இயக்கத்துக்கு வெறும் 4 மணி நேரம் போதுமானது என கூறியுள்ளது.சி.என்.என். டி.வி சேனின் நிக் ராபர்ட்சன், “ஆன்பர் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர்,கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றினார்கள். தற்போது அவர்களுக்கு உள்ள பலம், மற்றும் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை வைத்து கணக்கிட்டால், பாக்தாத் நகரை கைப்பற்ற அவர்களுக்கு வெறும் 4 மணி நேரம் போதுமானது” என்றார்.
ஒருவேளை அமெரிக்க ‘ராணுவ ஆலோசகர்கள்’ பாக்தாத் நகரில் இருக்கும்போது பாக்தாத் தீவிரவாத இயக்கத்தினரால் கைப்பற்றப்பட்டால், அடுத்து என்னாகும்?
No comments:
Post a Comment