Sunday, June 08, 2014

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 42 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 42 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர். அவர்கள் கடற்றொழிலுக்கு பயன்படுத்திய 8 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தலைமன்னார் கடற்படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைக்கவுள்ளனர். இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது.

No comments:

Post a Comment