இலங்கை சிறைகளில் உள்ள 78 தமிழக மீனவர்களை விடுவிக்க அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டிருப்பதாக ராஜபக்சே டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். 13 இலங்கை மீனவர்களை இந்தியா விடுதலை செய்ததை வரவேற்றுள்ள ராஜபக்சே, எஞ்சியுள்ள இலங்கை மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை அதிபர் உத்தரவையடுத்து 78 தமிழக மீனவர்களும் நாளை காலை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment