ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் செயிட் அல் ஹுசெய்ன், சிறிலங்கா விவகாரத்தில் கடுமையான போக்கை வெளிப்படுத்துவார் என்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடும் செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்கால பொறுப்புக்கூறல் மற்றும் போருக்குப் பிந்திய இன நல்லிணக்கம் ஆகிய விவகாரங்களில், சிறிலங்கா அரசாங்கம் வரும் மாதங்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், பக்குவப்பட்ட மனிதஉரிமை ஆர்வலரான செயிட் அல் ஹுசெய்ன், கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடும்.
பணியில் இருந்து விலகும் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இந்த மாதம், நியமிக்கவுள்ள விசாரணைக் குழு, ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய சிறிலங்காவுக்குச் செல்லவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடிமரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து விட்டது சிறிலங்கா.
இந்தநிலையில் விசாரணைக் குழுவை அனுமதிக்க முடியாது என்று கொழும்பு அதிகாரபூர்வமற்ற வகையில் கூறியுள்ளது.
இது அதிகாரபூர்வமான முடிவாக இருந்தால், செயிட் அல் ஹுசெய்ன், மனித உரிமை தவறுகளை சரிசெய்யும், அனைத்துலக தலையீடுகள் குறித்த தனது கடந்த கால நிலைப்பாட்டில் இருந்து கடுமையான நிலையை எடுக்கக் கூடும்.
2010இல் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவை வெளியே இருந்து தகவல்களைச் சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரியது போல, இவரும் கோரக் கூடும்.
செயிட் அல் ஹுசெய்னின் பெயரை ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூனே முன்மொழிந்துள்ளதால், சிறிலங்கா விவகாரத்தில், அவர் பான் மூனின் நிலைப்பாட்டிலேயே இருப்பார் என்பதையே காட்டுகிறது என்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
No comments:
Post a Comment