யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்ததாக கூறப்படும் பெருந்தொகை தங்கப்புதையலை
தேடித்திரிந்த குழுவொன்று காவல்த்துறையிடம் சிக்கியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.
வர்களிடமிருந்து அதிநவீன தொலைத்தொடர்பு கருவிகள், மற்றும் நிலத்திற்கு அடியே உள்ள உலோகங்களை
கண்டறியும் கருவிகளும் இருந்துள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதி நவீன,
உலோகங்களை கண்டுபிடிக்கும்
“மெட்டல் டிடெக்டர்”
கருவி ஒன்றும் இவர்களிடம்
இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.இந்த கருவியை எடுத்துக் கொண்டு வன்னிநோக்கி சென்று கொண்டிருந்த இருவரை ஓமந்தை காவல்த்துறையினர் கைது செய்ததையடுத்து, இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடவத்தை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர். இவர்கள் எடுத்து வந்த மெட்டல் டிடெக்டர் ஏற்கனவே அரசநிறுவனம் ஒன்றிலிருந்து திருடப்பட்டது என்றும், அது பற்றிய புலனாய்வு நடந்து வருவதாகவும் காவல்த்துறையினர் கூறிள்ளனர். இவர்கள் பெரும் வலையமைப்பாக இயங்குகிறார்கள் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், விசாரணைகளை
தீவிரப்படுத்தியுள்ளனர். இவர்களை வன்னிக்காட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படும் உள்ளூர்வாசிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த விடயத்தில் வன்னிக்காடுகளை கரைத்து குடித்த சில உள்ளூர்வாசிகளும் சம்மந்தப்பட்டுள்ளதாக
காவல்த்துறை கூறுகின்றது. கைது செய்யப்பட்டவர்களின் கைத்தொலைபேசியில் தங்கப் புதையல்
உள்ளதாக கருதப்படும் சில வரைபடங்கள் உள்ளதாகவும் காவல்த்துறை கூறியுள்ளது. இவர்களின்
கையடக்கத் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விசாரணையை நடத்த நீதிமன்றத்தில் அனுமதியையும்
நாடியுள்ளனர். வன்னியில் சிலர் தற்போது தங்க வேட்டையில் இறங்கியுள்ளார்கள் என்பது மட்டும்
தெள்ளத்தெளிவாக புரிகிறது.
No comments:
Post a Comment