Saturday, June 28, 2014

புலிகளின் சந்தேக நபரைக் கைது செய்ய இலங்கை விடுத்த கோரிக்கை! கருத்துக்கூற மறுக்கிறது கனடா

கனடாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு இலங்கை விடுத்திருந்த கோரிக்கை தொடர்பில் கருத்து கூற முடியாது என்று கனடாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கனகராஜா ரவிசங்கர் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தற்போது கனடாவில் தங்கி இருப்பதாக இலங்கை காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.


அவரை கைது செய்து நாடுகடத்துமாறு கடனாவிடமும், இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனடாவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவரை தொடர்பு கொண்டு ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியது.

எனினும் இதற்கு பதில் வழங்க மறுத்த பேச்சாளர், இந்தவிடயம் அரச இரகசியம் என்றும், அது குறித்து தகவல் வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்
.source:pathivu

No comments:

Post a Comment