இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இலங்கை திரும்பியிருக்கிறார் அதிபர் ராஜபக்ச. இனி, ‘ஈழ விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையையே இப்போதைய இந்திய அரசு கைக்கொள்ளுமா?’ என்பதுதான் இலங்கைத் தமிழர்களிடம் எழுந்திருக்கும் கேள்வி.
இது தொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டி:-
2009-ல் போர் முடிந்த போது இருந்த சர்வதேச சூழலுக்கும், இன்றைய உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் வேறுபாடு உள்ளதா?
நிச்சயமாக! மாபெரும் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது, சிறிலங்காவை உலக நாடுகள் பாராட்டின. ஐ.நா-வில் முதல் தீர்மானம், சிறிலங்காவைப் பாராட்டியே நிறைவேற்றப்பட்டது. மேற்கு உலக ஊடகங்கள், தமிழர்கள், மனித உரிமை அமைப்புகளின் இடைவிடாத முயற்சிகளால் இனப்படுகொலை ஆதாரங்கள் உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கிய பிறகே, உலக நாடுகளின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. இன்று, ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய அலுவலகத்தின் விசாரணைக்கு உள்ளாகும் ஒரு நாடாக சிறிலங்கா மாறியிருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் சர்வதேச புவிசார் நலன்களின் அடிப்படையில் அமைந்தாலும்கூட, ஈழ மக்களுக்குச் சாதகமாக இவை மாறும் வாய்ப்புகள் உள்ளன! ஆனால், அது அத்தனை எளிதல்ல என்பதையும் நாம் அறிவோம்.
சீனாவின் பக்கபலத்துடன் இந்தியாவையும் அமெரிக்காவையும் தனது நலன்களின் அடிப்படையில் அணுக முடியும் என நம்புகிறது சிறிலங்கா. இப்போது சீனா, சிறிலங்கா முழுக்க எங்கும் வியாபித்துவிட்டது. சிறிலங்கா விரும்பினாலும் சீனாவின் பிடியில் இருந்து இனி அது தப்ப முடியாது. இனியும் சிங்கள அரசுடன் உறவாடி, இலங்கைத் தீவில் இருந்து சீனப்பாம்பை இந்திய மயிலால் கொத்திக் கலைக்க முடியும் என நாம் கருதவில்லை. இந்த நாடுகளின் பரமபத வியூகங்கள் இடையேதான், இலங்கைத் தமிழர்களுக்கு நல்ல விளைவுகளை உண்டாக்க வேண்டும்!
இலங்கை மீதான சர்வதேச விசாரணை எப்போது தொடங்கும்?
சர்வதேச விசாரணைக்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஐ.நா-வின் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று சிறிலங்கா அறிவித்துள்ளது. இதனால் இலங்கைத் தீவுக்கு வெளியில் இருந்துதான், இந்த விசாரணையை மனித உரிமைகள் ஆணையம் மேற்கொள்ள வேண்டிவரும். அதே நேரம், இந்த விசாரணை முடிவு என்பது மிகவும் கீழ்மட்ட நிலையில் அமைந்துள்ளதே தவிர, ஈழத் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் இந்த விசாரணையின் மூலமாக வெளிவரும் உண்மைகள், சிங்களத்தை இன அழிப்புக் கூண்டில் ஏற்றத் துணை செய்யும் என்றே நாம் நம்புகிறோம். ஆனாலும், நாம் பல வழிகளிலும் போராட வேண்டியுள்ளது. குறிப்பாக, உலகின் பல நீதிமன்றங்களில் ஈழப் படுகொலைகளுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட வேண்டும்!
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த காங்கிரஸ் அரசு பல ஈழ அமைப்புகளையும் பிரமுகர்களையும் இந்தியாவில் தடை செய்ததே. உங்கள் அமைப்புக்கும் அது பொருந்துமா?
இல்லை. எங்களைத் தடை செய்யவில்லை!
‘இனப் படுகொலை குற்றவாளிகள்’ என்று 12 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’. நீங்கள் வெளியிட்டுள்ள இனப்படுகொலை குற்றவாளிகள் பட்டியலில், இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் பெயர் உள்ளது. ஆனால், ரணில் விக்கிரமசிங்கே பெயர் விடுபட்டுள்ளது. இனக்கொலையாளிகள் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?
சந்திரிகா குமாரதுங்க சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற முறையில், முப்படைகளின் மேன்மைத் தளபதியாகவும் இருந்தவர். ரணில், இராணுவ நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டது இல்லை. யாழ்குடா நாட்டின் மீதான ‘சூரியக்கதிர்’, வன்னி பெரு நிலம் மீதான ‘வெற்றி நிச்சயம்’ போன்ற இராணுவ நடவடிக்கைகள், சந்திரிகாவின் தலைமையில் நடந்தவைதான். சந்திரிகாவின் யுத்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சிதான் ராஜபக்சவின் தலைமையில் உச்சம் பெற்று இன அழிப்புப் போராக முள்ளிவாய்க்காலில் முடிந்தது. தமிழ் இன அழிப்பு முயற்சிகள் ராஜபக்சவால் மட்டும் மேற்கொள்ளப்பட்டவை அல்ல!
புலிகளுக்குப் பின்னர் ஈழ ஆதரவாளர்கள் சிதறிவிட்டார்கள். ஒரே குடையின் கீழ், உங்களால் மக்களை அணி திரட்ட முடியவில்லையே?
ஈழ மக்கள், தமிழகம் மற்றும் உலக மக்கள் அனைவருமே ‘ஈழ விடுதலை’ என்ற ஒற்றைக் கருத்தில் உறுதியோடு இருக்கிறார்கள். தமிழீழ தனி அரசை நோக்கிய பயணத்தில்தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளும் ‘ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் இணைவதன் மூலமாகவே, மக்களை ஒரு குடையின் கீழ் திரட்ட முடியும். அது மட்டுமே பூரண வெற்றியளிக்கும். அதை நோக்கியே எங்கள் செயல்பாடுகள் இருக்கும்!
ஆனால், தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களிடையே உங்களுக்கு ஆதரவு இல்லையே?
எங்களுடைய அரசியல் செயல்பாடுகளுக்கு, தமிழகத்தில் பூரண ஆதரவு உள்ளது. தமிழகத்தின் கோரிக்கையும், தமிழகச் சட்டமன்றத் தீர்மானங்களும், தமிழக முதல்வரின் கோரிக்கையும், எங்கள் கோரிக்கையும் ஒன்றுதான். எங்கள் அமைப்புக்கான ஆதரவு தளத்தைத் தமிழகத்தில் விரிவுபடுத்தி வருகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் தமிழகத்தில் செயற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அறிவுச் சமூகமும் எமக்கு ஆதரவாக உள்ளது. எதிர்வரும் காலங்களில் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவுத் தளம் மேலும் விரிவடையும் என நாம் உறுதியாக நம்புகிறோம்!
மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்ஷே கலந்துகொண்டிருக்கிறார். இந்திய அரசு, ஈழத்துக்காகப் போராடும் சக்திகளுக்கு நண்பனாக இருக்குமா?
அதற்கான வாய்ப்புகள் இனி அதிகம். ஈழத்தில் தமிழர்களை சிங்கள அரசு ஏன் அழித்தது என்ற உண்மையை, இந்தியாவின் புதிய பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. மகாவம்சத்தால் வளர்த்தெடுக்கபட்ட சிங்கள மனப்பான்மை, அடிப்படையில் இந்திய எதிர்ப்பால் கட்டப்பட்டது. இதற்கு, உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.
1898-ல் சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோவில் இருந்து இலங்கை வந்தபோது, அவரை, சிங்களப் புத்த பிக்குகள் சூழ்ந்துகொண்டு மறித்திருக்கிறார்கள். இதனை சுவாமி விவேகானந்தரே தனது எழுத்துகளில் பதிந்துள்ளார். உலகம் போற்றிய ஒரு மகானை சிங்கள புத்த பிக்குக்கள் எதிர்த்தது, சிங்களத்தின் இந்திய இந்து எதிர்ப்பு உணர்வின் ஓர் அடையாளம். ஈழத் தமிழர்களை இந்தியாவின் வரலாற்று நீட்சியாகவே சிங்களவர்கள் பார்க்கிறார்கள்!
தமிழர்களை அழிப்பதன் மூலம், இந்தியாவை இலங்கைத் தீவில் இருந்து அகற்றலாம் என, சிங்களம் எண்ணுகிறது. இந்தப் பார்வையில் ஈழத் தமிழர்களின் தோல்வி என்பது இலங்கையில் இந்தியாவின் தோல்வியாகவே அமையும். இதனைப் புரிந்துகொண்டு சிறிலங்கா தொடர்பான கொள்கைகளை மோடி அரசாங்கம் வகுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழீழ நிலப்பரப்பு, இந்து மகா சமுத்திர கேந்திரத்தின் முக்கியம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பும், தமிழர்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன.
சிங்களத் தலைவர்கள், நிலைமைகளுக்கு ஏற்ப வளைவதில் வல்லவர்கள். மோடியின் முன்னால் குனிவதுபோல ராஜபக்ச நடித்திருப்பார். ஆனால், அவரே பின்னால் சென்று சீனாவுடன் சேர்ந்து உதைத்துத் தள்ளலாம். இந்திய – ஈழத் தமிழ் மக்கள் உறவில் இடையில் ஏற்பட்ட கசப்புகளை நாம் கடந்து சென்று, புதியதோர் நல்லுறவுப் பாலத்தை பிரதமர் மோடியின் காலத்தில் கட்டி எழுப்ப முடியும் என நம்புகிறோம்!
எதன் அடிப்படையில் ஈழத் தமிழர் விவகாரத்தில், முந்தைய காங்கிரஸ் அரசிடம் இருந்து பா.ஜ.க. அரசாங்கம் வேறு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
காங்கிரஸ் அரசாங்கம், இந்திய நலன்களை தொலைநோக்கில் முன்னிறுத்த தவறி, ‘ராஜீவ் காந்தி கொலை’ என்ற ஒரு விஷயத்தை மட்டுமே வைத்து, ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையாண்டது. இதனால் அறிவுபூர்வமான அணுகுமுறையைவிட உணர்ச்சிமயமான அணுகுமுறையே தலைதூக்கி இருந்தது. விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்ற தமது விருப்பம் கைகூட வேண்டும் என்பதற்காக, பெரும் தமிழினப் படுகொலை ஒன்று சிங்களத்தால் நடத்தப்படுவதற்கு, முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் அனுசரணையாக இருந்தது என்பதை எம் மக்கள் மறக்கவில்லை.
மோடி தலைமையிலான புதிய அரசாங்கம், இத்தகைய பழைய சுமைகளைக் கொண்டிருக்கவில்லை. புதிய நிலைமைகளைக் கவனத்தில் எடுத்து இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஈழத் தமிழர் பாதுகாப்புக்கும் நெருக்கமான உறவுக்கான புற நிலைகள் தற்போது உருவாகி இருப்பதை அது புரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் சொல்கிறேன், இந்திய நலன்களும் ஈழத் தமிழர்களின் நலன்களும் வெவ்வேறானவை அல்ல!
விகடனுக்கு நன்றி
Regime change in India, Modi has returned to Sri Lanka to participate in the inauguration of the President. Now, in the case of the previous Congress government's approach to the topic of the current rules of the Government of India 'is the question posed to the Sri Lankan Tamils.In this connection, the Prime Minister of the Transnational Government of Tamil Eelam is known, gave an interview to the magazine Junior Vikatan: -
2009 - During the war in the international environment, there is a difference in the attitude of today's global world?
Of course! When the war ended Mullivaaikkaal with the greatest genocide, hailed cirilankavai world countries. The. Nations - the first resolution, adopted cirilankavai praise. West World Media, the Tamils, the relentless efforts of human rights organizations that shook the conscience of the world's population after the genocide sources, there was a change in the eyes of the world. Today, the Office of the United Nations Human Rights Commission of Sri Lanka, a country that has become the subject of investigation. In five years, the benefits of this change on the basis of international geo amaintalumkuta, these changes are likely to be in favor of the Eelam People! However, we know that it is so easy.
With the backing of China and India in terms of its benefits, the government hopes to be able to access. Now China, வியாபித்துவிட்டது anywhere throughout the country. It can no longer escape from the clutches of China in Sri Lanka wishes. No longer dealing with the Sinhala state, from the island of Sri Lanka, the Indian peacock cinappampai We do not consider that the king can dissolve. Paramapata strategies between the countries, the Sri Lankan Tamils to create good outcomes!
When starting an international investigation on Sri Lanka?
The program has been developed for an international investigation. 'I. Nations - The investigation will not accept that the government has announced. The outside of the island, the Human Rights Commission in this investigation were needed. At the same time, the lowest point of the trial, except amaintullate, do not take it as a matter of Eelam Tamils holocaust. Since the publication of the facts of this investigation, we believe that the Sinhala ethnic cleansing cage mounted accessory. However, in many ways we have to fight. In particular, the number of cases to be pursued in the courts against the massacre of Eelam!
The Sri Lankan government's request, the topic of many organizations in the past, the government had banned figures in India. It's applicable to your organization?
No. Do not ban us!
'Guilty of genocide' has published a list of 12 names 'Transnational Government of Tamil Eelam'. If you study the list of perpetrators of genocide, is the name of Sri Lanka's former President Chandrika Kumaratunga. However, Ranil vikkiramacinke name is missing. How inakkolaiyalikal roadmap?
Chandrika Kumaratunga as President of Sri Lanka, was a commander of armed forces superiority. Ranil, directly engaged in military action there. Jaffna peninsula on the 'curiyakkatir', fled to the land of Peru 'success is not guaranteed, such as military operations, headed by Chandrika natantavaitan. Rajapakse's war led by Chandrika continuation of initiatives have culminated in the Holocaust and the war ended in Mullivaaikkaal. Rajapakse is carried out only by the efforts of the Tamil ethnic cleansing!
Tigers of Eelam supporters scattered later. Under one umbrella, you can not mobilize people?
People Eelam, Tamil Nadu and all the peoples of the world 'Eelam' to ensure that there is a single theme. We're payanattiltan to separate state of Tamil Eelam. Transnational Government of Tamil Eelam, LTTE, all the organizations involved in the struggle for the 'United Front' in the name and by joining, you can mobilize people under one umbrella. It will only have an absolute winner. It will be directed toward our activities!
However, the Eelam Tamil supporters do not support you?
Our political activities, has the full support of the state. Tamil Nadu's request, Assembly resolutions, the Chief Minister's request, one of our demands. Tamil Nadu has been expanding its base of support for our organization. Transnational Government of Tamil Eelam has been in operation in the state of the friendship center. Knowledge of the state and society to support us. In years to come, Tamil Nadu and other states of India, the Transnational Government of Tamil Eelam We firmly believe that the support base and expand!
Modi Rajapakse attended the swearing-in ceremony. Government of India, be a friend to the forces fighting for Eelam?
Most likely no longer be appropriate. Eelam Tamils and the Sinhalese government in the fact that even destroyed, our expectation is to understand India's new prime minister. வளர்த்தெடுக்கபட்ட Mahavamsa, the Sinhala attitudes, built by India on the basis of opposition. This, for example, say the incident.
1898 - Swami Vivekananda in Chicago, came to Sri Lanka from him, cross the Sinhala Buddhist monks gathered around. The Lord vivekanantare recorded in his writings. Sinhala Buddhist monks resisted the world hailed as a saint, a symbol of the spirit of the anti-Sinhala and Hindu India. Sinhalese, Tamils, India's historic nitciyakave looking!
By destroying the Tamils, India will be removed from the island of Sri Lanka, Sinhalese intent. In view of the failure of the Eelam Tamils in Sri Lanka is India's failure. Understand the principles of this country, we expect to be divided by the Modi government. Moreover, the terrain of Tamil Eelam, the importance of the Indian Ocean kentirat place is situated in India's security and safety of Tamils are in question.
Sinhala leaders, according to the conditions of power in valaivat. Modi appears before kunivatupola Rajapaksa. But he could go behind and kicking along with China. India - Tamil Eelam in the relationship between people's bitterness passed, Prime Minister Modi's time to build a new bridge in harmony and hope you can!
In the case of Tamil Eelam on the basis of which, from the previous Congress government, BJP Expect that the government will adopt a different approach?
Congress government failed to represent Indian interests over the long term, 'Rajiv Gandhi assassination' was the only thing keeping, handling of the Eelam Tamils issue. The rational approach was triggered emotional approach. Kaikuta their desire to destroy the Tigers in this case, one of the great slaughter of Tamils Sinhala run, which was sponsored by the previous Congress government, we the people have not forgotten that.
The new government, led by Modi, had the old burdens. The new standards will take into account the security of India, Tamil Eelam security objective for the close relationship it has now evolved to understand. I say again, is different from the Indian interests and the interests of the Eelam Tamils!
Thanks to vikatan : Tran:googl
No comments:
Post a Comment