Monday, June 30, 2014

புதுச்சேரியில் இலங்கை அகதிகள் முற்றுகைப் போராட்டம்

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்காக தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவுடன் நெருக்கமாக செயற்படவுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையின் 153 தமிழ் அகதிகளை ஏற்றிய படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை அண்மித்துள்ளது.

தென்னிந்தியாவின் புதுச்சேரியிலிருந்து இவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எட்மிரல் திசர சமரசிங்க, அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கொள்கையை பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.


படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வோரை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு இலங்கை உதவும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, இன்றைய தினத்திற்குள் புகலிடக் கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துவரப்படும் பட்சத்தில் அவர்களை தங்க வைப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு கிறிஸ்மஸ்தீவிலுள்ள தடுப்பு நிலைய ஊழியர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கிறிஸ்மஸ் தீவை அண்மித்த கடற்பரப்பில் உள்ள படகில் 37 சிறுவர்கள் 32 பெண்கள் உள்ளிட்ட 153 இலங்கையின் தமிழக அகதிகள் இருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
source:pathivu

No comments:

Post a Comment