Tuesday, July 01, 2014

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு அறிய தரும் முக்கிய செய்தி

thondaman-1.JPGதிருமதி அனுஷியா சிவராஜா இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகராக சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பதவி ஏற்கவுள்ளார்.இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவி பிரமாண வைபவத்தில் கலந்துக் கொள்வதற்காக புது டெல்லி சென்றிருந்த போது அவருடன் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் சென்றிருந்தார்.

 
அவ்வேளையில் அடிகடி கட்சி மாறும் திரு.s.v.செகர் மஹிந்த ராஜபஷ்சவையும் ஆறுமுகம் தொண்டமானையும் சந்தித்தார்.

அம்மாவை பற்றியும் தமிழக அரசை பற்றியும் விரிவாக மஹிந்தவிற்கும் தொண்டமானிற்கும் அறியபடுத்தினார் அத்தோடுஅம்மாவை சமாளிப்பதென்றால் ஒரு பெண் உதவி உயர்ஸ்தானிகரை சென்னையில் அமர்த்துமாறு கோரிக்கை விடுத்தார்.உடனே மஹிந்த ராஜபஷ்ச தொண்டமானிடம் ஒரு பெண் பெயரை பரிந்துரைத்து அவரை சென்னையில் அமர்த்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
thondaman-4.JPG

திருமதி.அனுஷா சிவராஜா அவரது கணவர் பொன்னையா சிவராஜா தொண்டமான் குடும்பத்திற்கு சேவை செய்பவர்கள் திருமதி.சிவாராஜா மாகாண அமைச்சராக கடமையாற்றியவர்.தற்போது தொண்டமான் கட்சியில் உபதலைவியாக பதவி வகிக்கின்றார். இவரது கணவர் பொன்னையா சிவராஜா தொண்டமானின் மருமகனான செந்தில் தொண்டமானின் (மாகாண அமைச்சர்) பிரத்தியேக செயலாளராக கடமையாற்றுகிறார்.

கனிமொழி தலமையில் இலங்கை வந்த இந்திய தமிழ் MPகள் குழுவை தலமை தாங்கி உபசரித்து தமிழகத்தையும் தமிழர்களையும் காட்டிக்கொடுத்த தொண்டமான் குடும்பம் கருணாநிதி குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது உண்மையே….!

http://www.pathivu.c...ticle_full.aspx

thondaman-2.JPG

No comments:

Post a Comment