இந்திய மீனவர்கள் மீது தாம் தாக்குதல் நடத்துவதாக ணின்வைத்துள்ள குற்றச்சாட்டை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இலங்கை கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய அவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இஷங்கை இறைமையுள்ள நாடாகும். இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் சட்டங்களை முறையாக கடைப்பிடிக்கின்றனர். இலங்கை கடற்பரப்பில் சர்வதேச சட்டங்களை மீறுகின்ற அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களை நாம் கைது செய்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பினரிடம் கையளித்துவிடுவோம். அந்த தரப்பினரே சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றார்.
பிரிகேடியர் ருவன் வணிகசூரிய
இதேவேளை இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை, இந்திய மீனவர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். வடக்கில், தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள மீனவர்கள் மீன்பிடிப்பதில்லை. வடக்கு மீனவர்களின் தொழிலுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதுதொடர்பில் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் எதுவுமே பேசுவதில்லை என்றார்.

No comments:
Post a Comment