![]()
சிறிலங்காவில் தீவிரவாதத்துக்கு இராணுவ வழிமுறைகளின் ஊடாக தீர்வு காணப்பட்டுள்ள போதும், அங்கு இயல்பு நிலை ஏற்பட்டு விடவில்லை என்று, இந்தியாவின் பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை தலைவர் ஜூலியோ றிபெய்ரோ தெரிவித்துள்ளார்.
1980களில், பங்சாப்பில், காலிஸ்தான் பிரிவினைவாதப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில், பஞ்சப் கால்துறை தலைவராக இருந்த இவர், இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாத பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளின் மூலம் தீர்வு காண முடியாது என்று வலியுறுத்தியுள்ள இவர், அதற்கு அயர்லாந்து மற்றும் ஸ்பெய்னின் பாஸ்க் ஆகியவற்றை உதாரணமாக எடுத்துக் கூறியுள்ளார். எனவே ஒரு இராணுவத் தீர்வு உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காது. இராணுவத் தீர்வு காணப்பட்டதற்கு சிறிலங்காவை உதாரணமாக கூறலாம். அங்கு இராணுவ வழியில் தீர்வு காணப்பட்டாலும், இயல்பு நிலை அங்கு ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். |
Wednesday, June 04, 2014
இராணுவத்தீர்வு கண்ட சிறிலங்காவில் இயல்புநிலை இல்லை – பஞ்சாபின் முன்னாள் காவல்துறை தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment