அவுஸ்ரேலியா
நோக்கிப் படகில் சென்ற 153 தமிழ் அகதிகளும் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்ற
விபரத்தை வெளியிட அவுஸ்ரேலிய பிரதமர் ரொனி அபோர்ட் மறுத்துள்ளார்.
புதுச்சேரியில் இருந்து கடந்தமாதம், படகு ஒன்றில் சென்ற 153 இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றிய எந்த தகவலையும் வெளியிடாமல் மறைத்து வந்த அவுஸ்ரேலிய அரசாங்கம், இந்த விவகாரம் அந்த நாட்டின் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றதால், அகதிகளைத் தடுத்து வைத்துள்ள விபரத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் உயர்நீதிமன்றத்தில், அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டிருந்தது ரொனி அபோர்ட் அரசாங்கம்.
நேற்று இரண்டாவது நாளாக நடந்த நீதிமன்ற விசாரணையில், இந்த அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு முன்னர் 3 நாள் முன்னறிவிப்பு கொடுக்கப்படும் என்று அவுஸ்ரேலிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்த அகதிகள், அவுஸ்ரேலியா செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டுள்ள நிலையில், அவுஸ்ரேலிய கடல் உல்லைக்குள் நுழையாத இவர்களை குடிவரவுச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது.
அவுஸ்ரேலிய கடல் எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள சுங்க கப்பல் ஒன்றில், இந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இவர்கள் எந்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை வெளியிட அவுஸ்ரேலிய பிரதமர் ரொனி அபோர்ட் இன்று மறுத்துள்ளார்.
கடலில் நடக்கும் நடவடிக்கை தொடர்பான பேச விரும்பவில்லை என்றும், அது ஆட்கடத்தல்காரர்களுக்கு உதவியாக அமையும் என்றும் அவர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அகதிகள் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்று தான் கூறமாட்டேன் என்றும் அவுஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment