Sunday, July 13, 2014

உ.வே.சா. பதிப்புகள் தொடர்ச்சி...

இத்தொகுப்பில் இடம்பெறும் நூல்களும் ஆண்டுகளும் கீழ்க்காணும் நூலிலிருந்து வெளியிடப்படுகின்றன. இடம்பெற்ற நூல்: உ.வே.சாமிநாதையரின் தமிழ்ப்பணிகள் (தேசிய கருத்தரங்கம்), பதிப்புத்திறன், தொகுதி -1 (கட்டுரை: "உ.வே.சா.வின் தமிழ்ப் பதிப்புகள்' (பக்.184-188) - மு.இரவி, துணைப் பேராசிரியர், தொலைதூரக் கல்வி இயக்ககம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.


சங்க இலக்கியம்

1. பத்துப்பாட்டு - 1889
2. புறநானூறு - 1894
3. ஐங்குறுநூறு - 1903
4. பதிற்றுப்பத்து - 1904
5. பரிபாடல் - 1918
6. பத்துப்பாட்டு மூலம் - 1931
7. புறநானூறு மூலம் - 1936
8. பெருங்கதை மூலம் - 1936
9. குறுந்தொகை - 1937

காவிய நூல்கள்

10. சீவக சிந்தாமணி - 1887
11. சிலப்பதிகாரம் - 1892
12. மணிமேகலை - 1898
13. பெருங்கதை - 1924
14. உதயணகுமார காவியம் - 1935

புராண நூல்கள்

15. திருக்குடந்தைப் புராணம் - 1883
16. திருப்பெருந்துறைப் புராணம் - 1892
17. வீரவனப் புராணம் - 1903
18. சூரைமாநகரப் புராணம் - 1904
19. திருவாரூர்த் தியாகராச லீலை - 1905
20. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் - 1906
21. தணியூர்ப் புராணம் - 1907
22. மண்ணிப்படிகரைப் புராணம் - 1907
23. திருக்காளத்திப் புராணம் - 1912
24. விளத்தொட்டிப் புராணம் - 1934
25. ஆற்றூர்ப் புராணம் - 1935
26. தணிகாசலப் புராணம் - 1939
27. வில்லைப் புராணம் - 1940
28. புறப்பொருள் வெண்பாமாலை - 1895
29. நன்னூல் - மயிலைநாதர் உரை - 1925
30. நன்னூல் - சங்கர நமச்சிவாயர் உரை - 1928
31. தமிழ் நெறி விளக்கம் - 1937
32. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு - 1932
33. குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு - 1939
34. தண்டபாணி விருத்தம் - 1891
35. திருத்தணிகைத் திருவிருத்தம் - 1904
36. திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா - 1937
37. சிவசிவ வெண்பா - 1938
38. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா - 1940
39. திருக்காளத்திநாதர் இட்டகாவியமாலை - 1938
40. மகரநெடுங்குழைக்காதர் பாமாலை - 1939
41. திருமயிலைத் திரிபந்தாதி - 1930
42. சங்கரநயினார் கோயில் அந்தாதி - 1934
43. திருமயிலை யமக அந்தாதி - 1936
44. மதுரை சொக்கநாதர் மும்மணிக் கோவை - 1932
45. வலிவல மும்மணிக் கோவை - 1932


இரட்டை மணிமாலைகள்

46. நீலி இரட்டை மணிமாலை - 1874
47. பழனி இரட்டை மணிமாலை - 1932
48. களக்காட்டுச் சத்திய வாகீசர் இரட்டை மணிமாலை - 1932

பிரபந்தங்கள்

49. சீகாழிக் கோவை - 1903
50. திருவாவடுதுறைக் கோவை - 1903
51. பழமலைக் கோவை - 1935
52. கலைசைக் கோவை - 1935
53. சிராமலைக் கோவை - 1937
54. திருவாரூர்க் கோவை - 1937

உலா நூல்கள்

55. திருப்பூவணநாதர் உலா - 1904
56. திருக்காளத்திநாதர் உலா - 1904
57. தேவை உலா - 1925
58. திருவாரூர் உலா - 1905
59. மதுரைச் சொக்கநாதர் உலா - 1931
60. கடம்பர் கோயில் உலா - 1932
61. சங்கரலிங்க உலா - 1933
62. திரு இலஞ்சி முருகன் உலா - 1935
63. திருக்கழுக்குன்ற உலா - 1938

தூது நூல்கள்

64. கச்சிஆனந்த ருத்திரேசர்
வண்டுவிடு தூது - 1888
65. தமிழ் விடுதூது - 1930
66.
பத்ரகிரிநாதர் தென்றல்
விடு தூது - 1932
67. மான் விடுதூது - 1936
68. அழகர் கிள்ளை விடு தூது - 1938
69. புகையிலை விடுதூது - 1939

பிள்ளைத்தமிழ் நூல்

70. பழனி பிள்ளைத்தமிழ் - 1932

குறவஞ்சி நூல்

71.
திருமலையாண்டவர்
குறவஞ்சி - 1938

கலம்பக நூல்

72.
திருப்பாதிரிப்புலியூர்க்
கலம்பகம் - 1908

பரணி நூல்கள்

73. தக்கயாகப் பரணி - 1930
74. பாசவதைப் பரணி - 1933
75.
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்
களின் பிரபந்தத்திரட்டு - 1910
76. கபாலீசுவரர் பஞ்சரத்தினம் - 1940
77.
வேணுவனலிங்க விலாசச்
சிறப்பு - 1878
source:denamani
First Published : 13 July 2014 01:05 AM IST


No comments:

Post a Comment