Sunday, July 13, 2014

சீனக்குடாவில் விமானத்தள பராமரிப்புக்கு சீன நிறுவனத்துக்கு, அனுமதி அளித்த விவகாரம் சுஸ்மா சுவராஜ் கேள்வி

சீனக்குடாவில் விமானத்தள பராமரிப்பு நிலையத்தை அமைக்க சீன நிறுவனத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்த விவகாரம் குறித்து, சிறிலங்கா வெளிவிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம், இந்திய வெளிவிவிகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் நடந்த சந்திப்பின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

 சீனக்குடாவில் விமானத்தள பராமரிப்பு குறித்து சுஸ்மா சுவராஜ் கேள்வி எழுப்பியதாக, புதுடெல்லி அதிகார வட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி முறைப்படி அறிவிக்கப்படாத போதும், சீனாவின் தேசிய வான் தொழில்நுட்ப கூட்டுத்தாபனத்துக்கு சீனக்குடாவில் விமான தள பராமரிப்பு நிலையத்தை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது குறித்து பிரிசிடம் சுஸ்மா சுவராஜ் பிரச்சினை எழுப்பினார்.

சிறிலங்கா விமானப்படையிடம் உள்ள 34 சீனத் தயாரிப்பு விமானங்களைப் பராமரிப்பதற்கான இந்த நிலையம், 40.3 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது.

உள்நாட்டிலேயே விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தையும் உள்ளடக்கிய இந்த திட்டத்தில், சீனப் பணியாளர்களுக்கு, வெள்ளைக் கடற்கரையில் (மாபிள் பீச்) வதிவிடத் தொகுதி ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முடிவு, 1987இல் கையெழுத்திடப்பட்ட இந்திய - சிறிலங்கா அமைதி உடன்பாட்டை மீறும் செயல் என்று இந்தியத் தரப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment