சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்துள்ளதை, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் பிரசெல்சில், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
“தனது பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் சிறிலங்கா குறித்த விசாரணைக்கு ஆலோசனை வழங்குவதற்காக, மார்டி அதிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜஹாங்கீர் ஆகிய மூன்று நிபுணர்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளதை வரவேற்கிறோம்.
பொறுப்புக் கூறும் விவகாரங்களுக்குப் பதிலளிப்பது தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்படி சிறிலங்கா அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்கிறோம்.
உண்மையான நல்லிணக்கத்துக்கு இது முக்கியமான நகர்வாக இருக்கும்.
எந்தவிதமான பதிலடிகள் பற்றிய அச்சமும் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு மன்னர் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நீண்ட பயணத்துக்கு சிறிலங்கா வந்துவிட்டது.
அந்த முயற்சிகள் இப்போது நிறுத்தப்படக் கூடாது.
குறிப்பாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும், நிலையான அரசியல் தீர்வும், சிறிலங்காவின் அமைதிக்கும், உறுதிப்பாட்டுக்கும் மிகவும் அவசியமானவை என்று கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment