இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் இலங்கை மீது அதீத சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று த டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க குடியுரிமை கொண்ட ஒருவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டமைக்காக, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சரத் பொன்சேகாவை சாட்சியாக பயன்படுத்தி கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்க நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதும், அந்த காலப்பகுதியில் சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளருடன் நெருங்கி இருந்தமையால் இந்த முயற்சி கைக்கூடி இருக்கவில்லை.
எனினும் தற்போது யுத்தக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்தின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதன் கீழ் கோட்டாபய ராஜபக்ஷ தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் 1996ம் ஆண்டு அமுலாக்கப்பட்டு, இதுவரையில் யாருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படாதிருக்கின்ற யுத்தக் குற்ற சட்டத்தின் கீழ் கோட்டாபயவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது
source:pathvu
No comments:
Post a Comment