
யுத்கம் முடிவடைந்த பின்னர் கூட இலங்கை இராணுவம் பல தளங்களை கட்டி வருவதோடு, தனது இராணுவ பலத்தை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என்ற செய்தி இதனூடாக மேலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டலைட் புகைப்படங்கள் திடீரென வெளியானதால், இலங்கை அரசு ஆடிப்போயுள்ளது. ஏற்கனவே முள்ளிவாய்க்கால் பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாகவும், அது பாதுகாப்பு மிக்க பகுதி என்று கூறி இலங்கை பாதுகாப்பு அமைச்சு பல சட்டலைட் கம்பெனிகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது. அப்பகுதியை சட்டலைட் புகைப்படம் எடுக்கவேண்டும் என்றால் , தம்மிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன் நிலையில் தான் குறித்த படங்கள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக கோட்டபாய ராஜபக்ஷ கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். இன் நிறுவனம் வெளியிட்ட படங்களை எடுத்து அவர் மகிந்தருக்கு அனுப்பி இது தொடர்பாக தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதியை அமெரிக்க நிறுவனம் எவ்வாறு வேவுபார்க முடியும் ? என்று அவர் கடிந்துள்ளார். தற்போது ரகசியமாக அமெரிக்க அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடு படவும் அவர் முனைவார் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
source:athirvu
No comments:
Post a Comment