
ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான செயற்பாட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் காணாமல் போனோரை சந்தித்து அவர்களுக்கான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் நோக்கில் இந்த அனுமதி கோரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் தற்போது இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதிததாக எந்த குழுவினரும் இலங்கைக்கு வர வேண்டியதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment