Tuesday, September 02, 2014

இந்திய மீனவர்கள் 9 பேர் நெடுந்தீவில் கைது

Fishermenஅத்துமீறி நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்று கூறப்படும் இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை தாம் கைது செய்துள்ளனர் என்று நெடுந்தீவுக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட இவர்களை இன்று செவ்வாய்க்கிழமை கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பயன்படுத்திய ஒரு படகுஇமற்றும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று நீரியல் வளதிணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலில் படகு ஒன்று மூழ்கியதால் வேறு ஒரு படகில் கரை திரும்பிக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர் என்று இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூழ்கிய படகில் இருந்த 5 மீனவர்களும் மற்றைய படகில் இருந்த நால்வருமாக 9 மீனவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment