Tuesday, September 02, 2014

தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இலங்கையர்களும் அடங்குவர்! – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Human Rights Watchதாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அகதிகளில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் தடுப்பு முகாம்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்ட்டுள்ளனர்.

இவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். இந்த முகாம்களில் சிறுவர் உரிமைகள் மீறப்படுகின்றன.
அவர்களுடைய நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அடிப்படை வசதிகளற்ற தடுப்பு முகாம்களிலும், பொலிஸ் தடுப்ப நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து சர்வதேச அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment