Sunday, September 28, 2014

நீதிபதி குன்கா ஊழல் தடுப்புச் சட்டப்படி இத் தீர்ப்பு வழங்கவில்லை! நீதிபதி குன்கா மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டார்! மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பளித்ததற்கு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது:

ஜெயலலிதான மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அரசியல் எதிரிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மேன்மை மிக்க வழக்கறிஞர்களால் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

நீதிபதி குன்கா ஊழல் தடுப்புச் சட்டப்படி இத் தீர்ப்பு வழங்கவில்லை. அதுவும் ஜெயலலிதாவுக்கு அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறிய செயல். நீதிபதி குன்கா நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டார்.

அவர் ஊழல் தடுப்பு சட்டவிதிகளின்படி தீர்ப்பை வழங்கவில்லை. அபராதம் விதித்ததில் நீதித்துறை கோட்பாடுகளை குன்கா மீறிவிட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை நான் எதிர்க்கிறேன் என்றார் ராம் ராம்ஜெத்மலானி.

No comments:

Post a Comment