
பொதுவாக ராமேஸ்வர மீனவர்களின் படகுகள் அவர்களுக்கு சொந்தமானது அல்ல. ஜெயலலிதாவின் நண்பியான சசிகலாவின் பினாமியின் பெயரில் தான் பல படகுகள் இருக்கிறது என்றும், மேலும் முன்னாள் MP ரி.ஆர் பாலுவின் பினாமியின் பெயரில் மேலும் பல படகுகள் ஓடுகிறது. எனவே அவற்றை நீங்கள் தாராளமாக கைப்பற்றலாம் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதா ஒரு கட்டத்தில் மீனவர் பிரச்சனை குறித்து பேசாமல் அடங்கிவிடுவார் என்றும், அவர் அந்த விடையம் தொடர்பாக ஒருவர் முறை பேசமும், அவரது படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றவேண்டும் என்றும், கோமாளி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். இச் செய்தியை சில சிங்கள ஊடகங்கள் போட்டு உடைத்துள்ளது.
இச் செய்தி ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ள நிலையில், செல்வி ஜெயலலிதா கடும் ஆத்திரம் அடைந்துள்ளார் என்று சென்னையில் இருந்து வெளியாகும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment