Saturday, October 11, 2014

முள்ளியாக்காலை தடுக்க முடியாத பான் கீ மூனுக்கு ஏன் நோபல் பரிசு ? இன்னர் சிட்டி பிரஸ் !

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடமை தவறி செயற்பட்டதாகவும் இதனால் அவருக்கு நோபல் சமாதான விருது வழங்கப்படக் கூடாது எனவும் இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க பான் கீ மூன் ஆக்கபூர்வமான முனைப்புக்களையும் எடுக்கவில்லை.

நோபால் சமாதான விருதினை பெற்றுக்கொள்ளும் முனைப்புக்களில், பான் கீ ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. எனினும், பான் கீ மூனுக்கு சமாதான விருது கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. பாப்பாண்டவர், பாகிஸ்தான் சிறுமி மலாலா மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு உள்ளிட்ட தரப்பினரது பெயர்களும் சமாதான விருதிற்கான பட்டியலில் முன்னணி வகிக்கின்றன. இந்த ஆண்டில் இல்லாவிட்டால் பதவிக் காலம் முடிவடையும் முன்ன நோபாள் சமாதான விருதினை பெற்றுத் தருவதாக பான் கீ மூனுக்கு ஆலோசகர் ட்ரேஜே ரியோட் லார்சன் Terje Roed-Larsen தெரிவித்துள்ளார்.
சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக விருது கிடைப்பதனை விடவும் காலநிலை மாற்றம் தொடர்பில் எடுத்துக்கொண்ட சிரத்தைக்காகவே பான் கீ மூனுக்கு விருது கிடைக்க அதிக சாத்தியங்கள் காணப்படுகின்றன. எவ்வாறெனினும் யுத்தங்களின் போது மத்தியஸ்தம் வகித்தல் பக்கச்சார்பற்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குதல, சமாதானத்தை ஏற்படுத்தல் போன்ற விவகாரங்களில் பான் கீ மூன் குறைந்தளவு வெற்றியையே பதிவு செய்துள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில் அரசாங்கம் பொதுமக்களை கொலை செய்த போது பான் கீ மூன் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் பான் கீ மூனின் விருதின் வாய்ப்பினை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே பலரும் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment