Saturday, October 11, 2014

பிரபாகரன் இருக்கிறார்: புலிப்பார்வை தியேட்டரில் ஓட இயக்குனர் வெளிவிடும் பரபரப்புச் செய்தி !

புலிப்பார்வை என்ற படத்தை எடுத்து, அதில் சிறுவர் போராளியாக தேசிய தலைவர் மகன் பாலச்சந்திரனை சித்தரித்தார்கள். இலங்கை அரசு செய்தா பொய்பிரச்சாரத்தின் பெரு வெற்றியாக கருதப்படுவது இதுதான். அதாவது புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்த்தார்கள் என்பது. பின்னர் புலிகள் தற்கொலைக் குண்டுகளைப் பாவிக்கிறார்கள் என்று இந்த இரண்டையும் இலங்கை அரசு உலகளாவிய ரீதியில் பிரச்சாரம் செய்தது. இதனை அடுத்தே சர்வதேச நாடுகள் பல புலிகளை தடைசெய்தார்கள் என்பது பலர் நன்கறிந்த விடையம். இதனைக் கூட இந்த படத்தின் இயக்குனருக்கு சொல்லித் தான் புரியவைக்கவேண்டி இருந்தது.

எனக்கு புரிந்துவிட்டது, அதனால் அக் காட்சிகளை எடுத்துவிட்டேன் என்று புலிப்பார்வையின் இயக்குனர் தெரிவித்தார். ஆனால் ஒரு கனவுக் காட்சி ஒன்று மட்டும் இருக்கிறது என்றார். அதில் மீண்டும் பாலச்சந்திரன் துப்பாக்கியோடு தான் வருகிறார். தற்போது தேசிய தலைவர் உயிருடன் இருக்கிறார், என்று புலிப்பார்வையின் இயக்குனர் சொன்னதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தேசிய தலைவர் இருப்புக் குறித்து எந்த ஈழத் தமிழர்கள் மத்தியிலும், குழப்பங்கள் இருந்ததும் இல்லை இனி இருக்கப்போவதும் இல்லை. ஆனால் தேசிய தலைவரோடு நான் இருந்தேன், அவரை நான் சந்தித்தேன் என்று சொல்லியே பலர் அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் எல்லாரும் ஈழப் போராட்டத்தை விற்று அதனையும் பணமாக்கவே முயல்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் புலிப் பார்வை என்னும் இத்திரைப்படம் இந்தியாவில் ஓடாவிட்டாலும் , வெளிநாட்டுகள் ஓடினாலே போட்ட காசு கிடைத்துவிடும். அதனால் சில பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இதுவே தற்போதும் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக இவர்கள் போட்ட காசை உழைத்து எடுக்க , திடுக்கிடும் தகவல்களை இவர்கள் வெளியிடுவார்களாம். இதனை வாசிக்கும் ஈழத் தமிழர்கள் இந்த படத்தை திரையரங்கில் சென்று கூடுதலாகப் பார்ப்பார்களாம் என்று எல்லாம் எப்படி ரூம் போட்டு யோசிக்கிறார்கள் பார்த்தீர்களா ?

No comments:

Post a Comment