Sunday, October 19, 2014

புலிகள் மீதான தடை: தீர்ப்பை ஆராய ஆரம்பித்துள்ளது ஐரோப்பிய நீதிமன்றம் !

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் போது அவை அந்த நாட்டின் சட்டத்திற்க்குட்பட்டதாகவும், அதனை பின்பற்றுவதாகவும் அமையவேண்டும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டேலி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை இரத்துச் செய்தமை தொடர்பாக மிக உன்னிப்பாக ஆராய்ந்துவருகிறோம், சகலரினது கருத்துக்களையும் செவிமடுத்த பின்னரே பதிலளிப்போம், இந்த தருணத்தில் எதனையும் செய்ய முடியாது, இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சாதராணமான விடயம்,ஐரோப்பிய ஒன்றியம் ஜனநாய கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகின்றது, நீதித்துறையும் அதன் செயற்பாடுகளும் சட்டத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும்,

ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாதத்தை எதிர்க்கின்றது, அதுவே அதன் நிகழ்ச்சி நிரலில் முக்கியமாக உள்ளது, இதற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுக்கிறோம்,பயங்கரவாதத்திற்க்கு எதிராகபோராடுவதற்க்கு அப்பால் அதற்கு எதிராக நாளாந்தம் நடவடிக்கைகளை எடுத்தவண்ணமுள்ளோம், ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்க்குட்பட்டவையே , நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஆராய்ந்துவருகிறோம், அதனை தொடர்ந்து செய்வோம்,
இலங்கை, பிரிட்டன் அல்லதுவேறு எந்த நாடாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மிக அவதானமாகவே முன்னெடுக்க வேண்டும், என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும் அது சட்டத்திற்க்குட்பட்டதாக , அதனை பின்பற்றுவதாக அமையவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தத்தில் ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்போது ஆராயத்தொடங்கிவிட்டது ஐரோப்பிய ஒன்றியம்.
source:athirvu

No comments:

Post a Comment