லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீர
மறவர்கள், 2ம் லெப் மாலதி மற்றும் இம்மாதத்தில் காவியமான மாவீரர்கள்
அனைவரதும் நினைவெழுச்சி நிகழ்ச்சி 19.10.2014 ஞாயிறு மாலை 6 மணி முதல் 8
மணி வரை தென்மேற்கு லண்டன் south wimbledon இல் அமைந்துள்ள merton hall இல்
நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பொதுச் சுடரினை 2ம் லெப் பெரியதம்பியின் மகன்,
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடகிழக்கு லண்டன்
செயற்பாட்டாளர் திரு பிரேம் அவர்கள் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக்கொடியை பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென் மேற்கு லண்டன் ஒருங்கிணைப்பாளர் திரு நவம் அவர்கள் ஏற்ற, அதனைத் தொடர்ந்து ஈகச் சுடரினை 2ம் லெப் ரெட்ணம் என்றழைக்கப்பட்ட லகுபரனின் தாயார் திருமதி லீலாவதி நித்தியானந்தசிவம் அவர்கள் ஏற்றினார். தொடர்ந்து மாவீரர்களுக்கு மலர்மாலையை திருமதி சுபா அவர்கள் அணிவித்தார். பின்னர், அகவணக்கத்தைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் ஒன்றுகூடிய மக்கள் அனைவரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு மலர் தூவி, சுடர் ஏற்றி, வணக்கம் செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.கந்தையா
இராஜமனோகரன் அவர்கள் உரையாற்றினார். சமகால அரசியல் நகர்வுகள்
தொடர்பாகவும் தமிழர்கள் அனைவரும் தேசியத் தலைமையின் வழி நின்று, கொண்ட
கொள்கையில் உறுதியாக, இலக்கை நோக்கி ஒன்றுபட்டுப் பயணிப்பது தொடர்பாகவும்
அவர் உரையாற்றினர்.
மேலும் கவிதைகள் , எழுச்சி நடனம் ,எழுச்சிப்பாடல் , மாவீரர் தின ஏற்பாடுகள் தொடர்பான உரை ஆகியனவும் இடம்பெற்றன.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற
இவ்வெழுச்சிநாள் ஒன்றுகூடலில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன்
கலந்து கொண்டனர்.

source:pathivu
No comments:
Post a Comment