விடுதலைப் புலிகள் தடை தொடர்பாக தாம் தற்போது மீளாய்வு செய்து வருவதாக,
பிரித்தானியா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இதுதொடர்பான முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கி
இருந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவசரமாக புலிகளை தடைசெய்துவிட்டார்கள் என்று அந்த
தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்து. இதனை பல உறுப்பு நாடுகள் பரிசீலனை செய்து வருகின்ற
நிலையில் தற்போது பிரித்தானியாவும் மீளாய்வு செய்யவேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அதேவேளை இந்தத் தீர்ப்பு உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியிலான ஒன்றல்ல என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
நடைமுறை விதிகளின் அடிப்படையில் சட்ட ரீதியாக புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் பற்றிய தீர்ப்பு இது என்பதும் முக்கியமானது. பிரிட்டனும் ஏனைய உறுப்பு நாடுகள் போன்று குறிப்பிட்ட தீர்ப்பு மற்றும் பொருத்தமான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறது. இதேவேளை அடுத்த மூன்று மாத காலத்திற்க்கு விடுதலைப் புலிகளின் சொத்துக்களின் முடக்கம் நீடிக்கும் என இலங்கைக்கான பிரிட்டனின் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புலிகளின் சொத்துக்களை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் முன்னெடுக்கவில்லை. காரணம் அதனை சூறையாட கோட்டபாய ஏற்கனவே திட்டங்களை தீட்டிவிட்டார். ஆனால் புலிகளின் தடையை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார்கள். பிரித்தானிய அரசானது இது தொடர்பாக தனது முடிவை எட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும் .
No comments:
Post a Comment