Thursday, October 30, 2014

ஜ.நா குழுவினது பயணம்! மக்களிடையே நம்பிக்கையீனம்!!

ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் நிறைவேற்று குழு இன்று யாழ்.வருகை தந்துள்ள நிலையில் அவர்களது விஜயம் தொடர்பில் வடக்கில் பல தரப்புக்களும் சந்தேககங்களை எழுப்ப தொடங்கியுள்ளன. முன்னதாக இன்று குழுவினர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்திருந்தனர்.
குழுவின் உதவி செயலாளர் நாயகம் ஜீன்-பால் லெபோரேட் தலைமையிலான குழுவே இந்த சந்திப்பை நடத்தியிருந்தது.
இந்த சந்திப்பு குறித்து யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லை அரசஅதிபர் வேதநாதன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துகளை தெரிவித்திருந்தனர்.



தற்போது எந்தளவான முன்னேற்றங்கள் அடையப்பெற்றுள்ளன என்பது தொடர்பிலும், மக்கள் தங்கள் உரிமைகளை எந்தளவுக்கு சுதந்திரமாக அனுவிக்கின்றனர் என்பது தொடர்பிலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் எவ்விதமான இயல்பு நிலையில் மக்கள் வாழ்கின்றனர் என்றும் அந்த மக்களுக்காக வழங்கப்படும் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


மேலும், சிவில் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும், குற்றங்கள் செய்தவர்கள் எவ்வாறு தண்டிக்கப்படுவதாகவும் கேட்டிருந்தனர். இவற்றுக்கு பதிலளித்த நாங்கள், 'காவல்துறை நிர்வாகம் நடைமுறையில் இருக்கின்றது. குற்றங்கள் செய்தவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக தண்டிக்கப்படுவதாக' கூறியதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இலங்கை இராணுவத்தின் ஒரு அங்கமாக இயக்கப்படும் யாழ்ப்பாணம் சிவில் சமூகம் எனும் போலி அமைப்பினையும் வெள்ளியன்று அவர்கள் பொதுநூலகத்தில் சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சியின் மூத்த அங்கத்தவரும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சலுகைகள் மற்றும் பாதுகாப்பினை பெற்றுவரும் நபரொருரை தலைவராக முன்னிறுத்தியே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே செயற்பட்டுவரும் சிவில் சமூக அமைப்பினை சிதைக்க உருவாக்கப்பட்ட அமைப்பினையும் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ள இக்குழு பக்கச்சார்பற்ற அமைப்புக்களினை சந்திக்க ஆர்வம் காட்டமையே நம்பிக்கையீனத்தை தோற்றுவித்துள்ளது. source:pathivu

No comments:

Post a Comment