Wednesday, October 08, 2014

நரேந்திர மோடியின் நாடகம் ஆரம்பம்: ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன ? இதோ உண்மைகள் !



கடந்த 27ம் திகதி முதல் பெங்களூர் சிறையில் செல்வி ஜெயலலிதா சிறையில் அடைபட்டு உள்ளார். அம் மாநிலத்தை ஆட்சி செய்வது காங்கிரஸ் கட்சிதான். செல்வி ஜெயலிதாவோடு கூட்டுச் சேர விரும்பியுள்ள காங்கிரஸ் தற்போது அவருக்கு உதவ முன்வந்துள்ளது. இதனால் நேற்றைய தினம்(07) ஜெயலலிதா தாக்கல் செய்த பிணை மனுவை ஏற்று அவரை விடுதலை செய்வார்கள் என்று பலராலும் எதிர்பார்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது அவர் உச்ச நீதிமன்றம் செல்லவேண்டி உள்ளது. அங்கு சென்றால் கூட பிணை கிடக்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது. காரணம் என்னவென்றால் அது கருநாடக அரசு அல்ல. மத்தியில் உள்ள மோடி அரசாங்கமே இதற்கு காரணம் என்ற உண்மை மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது.

அதற்கு சான்றாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கடந்த நவராத்திரி தினத்தன்று, பா.ஜ.க கட்சியின் தமிழ் நாட்டு தலைவி தமிழிசை, சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் வீட்டிற்குச் சென்றுள்ளார். அன்று லிங்கா படப்பிடிப்புக்காக ரஜனிகாந் வீட்டில் இல்லை. இருப்பினும் மனைவி லதாவுடன் அவர் நீண்ட நேரமாக அரசியல் குறித்து பேசியுள்ளார். அம்மா சிறையில் இருப்பதால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை ரஜனி சார் தான் நிரப்பவேண்டும் என்று கூறியுள்ளார். தமது கட்சி அனைத்து ஆதரவையும் தரும் என்றும், இதுவே நல்ல பொன்னான தருணம் என்று ஆசைவார்த்தை பேசியுள்ளார். நரேந்திர மோடி ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டு இருப்பதகாவும். அது முடிவுற்றபின்னர் அதன் வெளியீடு விழாவுக்கு உங்கள் குடும்பத்தை நான் டெல்லி கூட்டிச் செல்வேன் என்று தமிழிசை மேலும் கூறியுள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் பஜக கட்சி கொடிகட்டிப் பறந்தாலும், தமிழகத்தில் அதன் செல்வாக்கு இன்னும் சரிந்த நிலையில் தான் உள்ளது. அவர்கள் தமிழகத்தில் போட்டியிட்டு வெல்ல முடியாது. அதனால் ரஜனியை வைத்து பெரும் அரசியல் ஆரம்பிக்க நரேந்திர மோடி ஒரு ரகசிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். உங்களுக்கு இப்போது தெரியும் ஏன் அம்மாவுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்று. குறித்த சில காலம் வரை அவரை அப்படியே அடைத்துவைத்து, அதற்குள் தமிழக அரசியலை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நரேந்திர மோடி திட்டங்களை தீட்டி வருகிறார் என்பது இப்போது தமிழர்களுக்கு நன்றாக புரியும்.source:athirvu

No comments:

Post a Comment