2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுணாமி குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் பெரும்பாலும் கொல்லப்பட்டது எமது ஈழத் தமிழ் மக்களே. இத்துன்பம் இனியும் நிகழக்கூடாது என்று விரும்பிய சிலர், சுணாமி ஏற்பட்டால் அதனை அமெரிக்கா போன்ற நாடுகள் எவ்வாறு முன் கூட்டியே அறிகிறதோ அதுபோல வன்னி நிலப்பரப்பில், ஆட்சி நடத்திய புலிகளும் அறியவேண்டும் என எண்ணினார்கள். இன்னும் ஒரு முறை சுணாமி வந்தால் புலிகள் மக்களை காப்பாற்றுவார்கள் என்று நினைத்த, தமிழ் பற்றாளர் ஒருவர், கணணி மென்பொருள் ஒன்றை நண்பர்களுடன் இணைந்து தயாரித்தார். இன்ரர் நெட் வசதி இருந்தால் போதும். அது தானாகவே பசுபிக் கடலில் மிதந்துகொண்டு இருக்கும், சுணாமி அவதானிப்பு நிலையத்தை தொடர்புகொண்டு அங்கே உள்ள தரவுகளை வன்னிக்கு கொண்டுவரும். மேலும் 5.5 ரெக்டர் அளவை விட உயர்ந்த நில நடுக்கம் ஏற்பட்டல் அது உடனே வன்னியில் உள்ள கணணியில் எச்சரிக்கை செய்யும்.
இதுபோன்ற அமைப்பு ஒன்றை உருவாக்கிய தமிழ் பற்றாளர் ஒருவர், வன்னிக்குச் சென்று அதனை, சு.ப தமிழ்ச்செல்வனிடம் காட்டியுள்ளார். தமிழ்ச்செல்வனும் இது நல்லவிடையம் என்று கூறி அதனை சமாதானச் செயலகத்தில் பொருத்தும்படி கூறியுள்ளார். அன்றைய தினம் மாலை அவர் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை சந்திகச் சென்றுள்ளார். இதுபோல வெளிநாட்டில் இருந்து ஒரு இளைஞர் வந்தார். அவர் சுணாமி ஏற்பட்டால் அதனை முன்கூட்டியே கண்டறியும் ஒரு கணணியையும் அதற்கான மென்பொருளையும் கொண்டுவந்துள்ளார் என சு.ப தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அப்படியா நல்ல விடையம் அல்லாவா . இது கால நிலை மற்றும் இயற்கை அனர்த்தம் தொடர்பான விடையம் அல்லவா ? என்று தேசிய தலைவர் கேட்டுள்ளார். அதற்கு தமிழ்ச்செல்வனும் ஆம், என்று பதில் கூறியுள்ளார். அப்படி என்றால் சமாதானச் செலகத்தில் அதற்கு என்ன வேலை இருக்கிறது ? என்று தேசிய தலைவர் கோட்டுள்ளார்.
ஒரு நிமிடம் தமிழ்ச்செல்வனுக்கு தேசிய தலைவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. பின்னர் தான் தலைவர் விளக்கி கூறியுள்ளார். எம்மிடம் பல துறைகள் உள்ளது. காவல் துறை, சுங்க வரி, நீதிமன்றம், அபிவிருத்தி என்று பல துறைகள் உள்ளது காலநிலை அவதானிப்பு, சுணாமி எச்சரிக்கை என்ற துறை எம்மிடம் இல்லை. எனவே அப்படி ஒரு துறையை நாம் ஏன் ஆரம்பிக்க கூடாது என்று தேசிய தலைவர் கூறியுள்ளார். தேசிய தலைவரின் சிந்தனை, தொலைநோக்கு பார்வை, அவரின் புத்திக் கூர்மை அனைத்தையும் புரிந்துகொண்ட சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் உடனடியாக கால நிலை அவதானிப்பு நிலையம் என்று ஒன்றை திறக்க, ஏற்பாடுகளைச் செய்தார். புலம்பெயர் நாட்டில் இருந்து சென்ற அந்த இளைஞனும் பல உதவிகளைச் செய்து இறுதியாக , அவதானிப்பு நிலையம் 2005ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தேசிய தலைவர் பிறந்த நாளான நவம்பர் 26 அன்று அது திறந்துவைக்கப்பட்டது. அந்தவேளையில் அக்கட்டடம் வெட்டவெளியில் அமைந்துள்ள காரணத்தால் தலைவரின் பாதுகாப்பு கருதி அவரால் அது திறந்துவைக்கப்படவில்லை.
ஆனால் அடுத்த நாள் மாலை தேசிய தலைவர் பிரத்தியேகமாக அங்கே வந்து அனைத்து உபகரணங்களையும் பார்வையிட்டுள்ளார். 24 மணி நேரமும் இயங்கும் அந்த கட்டமைப்பை அவர் பார்வையிட்டதும், அங்கே கடமையில் அமர்ந்து இருந்த ஊனமுற்ற போராளிகளுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. பகலில் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கி அதனைச் சேமித்து, இரவில் அதனை பயன்படுத்தும் வகையில் வன்னியில் அந்த நிலையம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. முழு இலங்கையிலும் முதல் முதல் உருவான சுணாமி எச்சரிக்கை நிலையம் கிளிநொச்சியில் தான் முதல் முதல் ஆரம்பிக்கப்பட்டது என்ற வரலாற்று பெருமையையும் அது பெற்றது. சிங்கள தலைவர்களான ஜெயலத் ஜெயவர்தன முதல்கொண்டு, பல வெளிநாட்டவர்கள் அந்த நிலையத்தை வந்து பார்வையிட்டுச் சென்றார்கள். விடுதலைப் புலிகள் மக்களை கொல்கிறார்கள், சிறுவர்களை படையணியில் இணைக்கிறார்கள் , மேலும் தற்கொலை தாக்குதலை மேற்கொள்கிறார்கள் என்று ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட பரப்புரைகள் அனைத்தும் இதனூடாக தவிடுபொடியாகியது. மக்களை புலிகள் கொல்வது என்றால் அவர்கள் ஏன் சுணாமி நிலையத்தை நிறுவவேண்டும் என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுகிறது அல்லவா ?
தேசிய தலைவரது சிந்தனை என்பது இன்றைக்கு அல்லது நாளையது பற்றியது அல்ல. அது ஆண்டுகளை கடந்து யுகங்களை கடந்து என்றும் வாழ்ந்துகொண்டு இருக்கும் சிந்தனைகள் ஆகும் !
source:http://leaderoftamils.com
No comments:
Post a Comment