Friday, November 14, 2014

ஜேர்மனியில் அமையும் மாவீரர் "னினைவுத் தூபி" வேற்றின மக்களும் பார்வையிட்டனர் !


தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் நினைவிடங்கள், துயிலிடங்கள், நினைவுத்தூபிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. குறித்த துயிலும் இல்லங்கள் சிறீலங்காப் படையினரின் கனரக வாகனங்களால் முற்றாக இடித்தழிக்கப்பட்டு அதன் எச்சங்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியால் செல்வோரால் அங்கு உள்ள பூமரங்களையும், ஏனைய மரங்களையும் வைத்து மட்டுமே அடையாளம் காணக்கூடியதாக இருந்தும், அவை கூட இன்று அழித்தொழிக்கப்பட்டது .சர்வதேச சட்டங்களை மீறி மனிதநேயமற்ற இனவெறி பிடித்த ஸ்ரீலங்காப் படையினர் தமிழர்களின் வரலாற்று தொன்மைகளை அழிக்கும் நடவடிக்கையின் உச்சகட்டத்தை வெளிக்காட்டும் செயலாக அவைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மண் விடுதலையடைய வேண்டும், தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதற்காய் தம் உயிர்களைத் தந்த மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்ததாய் புலம்பெயர் தேசத்தில் யேர்மனியில் இப் பிரதான நினைவுத்தூபி அமைகின்றது . தாயகத்தில் எமது மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டாலும் இன்றைய நிலையில் புலம்பெயர் தேசத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் மாவீரர்களின் நினைவாக நினைவுத்தூபி அமையும் என்பது நிச்சயம் . அதே போல் எந்த மண்ணுக்காக எமது மாவீரர்களும் மக்களும் தங்கள் உயிர்களை கொடுத்தார்களோ அந்த தமிழீழ தேசத்தில் மீண்டும் சுதந்திர காற்று வீசும் மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்படும்.
பல வேற்றின மக்கள் வந்து இதனைப் பார்வையிட்டும் செல்கிறார்கள். இது புலம்பெயர் தேசத்தில் உருவாகியுள்ள புது முயற்சி. இது பல ஐரோப்பிய நாடுகளுக்கும் விரைவில் பரவும்.

No comments:

Post a Comment