ஒடிசா
தலைநகர் புவனேஸ்வரில் நேற்று(10) நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக விழாவில்,
பா.ஜ.க. முக்கிய புள்ளியான சுப்பிரமணிய சாமி பங்கேற்றார். அப்போது
அவரிடம் செய்தியாளர்கள், ’’மோடி அரசால் உங்களது திறமைகள் குறைத்து
மதிப்பிடப்படுவதாக நீங்கள்
கருதுகிறீர்களா?’’ என்ற கேட்டதற்கு, ‘’என்னைப் பார்த்தால் கவலையுடன்
இருப்பதுபோல் உங்களுக்கு தெரிகின்றதா
? நான் நாடு
முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். நேற்று கொல்கத்தாவில் இருந்தேன்.
இன்று பல்கலைக்கழகத்தின்
அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கிறேன்.பதவிக்கு ஏங்கிக் கொண்டிருப்பது வெள்ளையர்களின் மனநிலைக்கு ஒப்பானதாகும். இந்திய பிராமணர்களும், கல்வியாளர்களும் எந்தப் பதவியிலும் இருந்ததில்லை. ஆனால், அவர்கள் சொல்வதை ராஜாக்கள் செவிமடுத்து வந்துள்ளனர். எந்த விவகாரம் தொடர்பாக நான் என்ன சொன்னாலும் ராஜா(மோடி) செவிமடுக்கிறார். நான் இன்று அத்தகைய நல்ல நிலையில் இருக்கிறேன். என்னை மந்திரியாக்கி இருந்தால் ஒரேயொரு அமைச்சகத்தின் மீது மட்டுமே நான் அக்கறை செலுத்துவேன். இப்போதோ.., எல்லா அமைச்சரவைகளைப் பற்றியும் என்னால் பேச முடியும். எனக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்’’என்று கூறினார்.
இவர் கூறியது ராஜபக்ஷவையா இல்லை ராஜா என்று கூறுவது மோடியையா என்று தெரியாமல் சில ரிப்போட்டர்கள் தலையை பிய்த்துக்கொண்டார்களாம்
No comments:
Post a Comment