Wednesday, November 12, 2014

புலிகள் தடையை நீடிக்குமாறு ரணில் விக்கிரம சிங்ஹ ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரினார் !

தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எழுத்து மூலம் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்தியமை தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தாம் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்க உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு ஐக்கியநாடுகள் உயர் பிரதிநிதி பெட்ரிக்கா மொஹாரினிவிடம், ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் கோரியுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகிந்த ராஜபக்ஷ சிங்கள ஊர்களுக்குச் சென்று, எல்லா மோடைகளிலும் ரணில் சொல்லி தான் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் தடையை நீக்கியது என்று கூறிவருகிறார். இந்த பிரச்சாரத்தை எப்படி முறியடிப்பது என்று தெரியாமல் திறணிய ரணில் ஒருவாறாக, தற்போது இந்த யுக்தியைக் காயாண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. பொதுவாக படித்த மற்றும் உயர்தர வர்கத்தில் உள்ள மக்கள், மகிந்தர் மூன்றாம் தடவை போட்டியிடக் கூடாது என்று கருதுவதாக கூறப்படுகிறது.
இதனால் இம் முறை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. சிலவேளைகளில் போட்டியிடும் இருவருமே 50 வீதமான வாக்குகளைப் பெறவாப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இல்லையெனில் 1 சதவீதம் அல்லது 2 சதவீதத்தால் தான் வெற்றிவாப்பு கிட்டும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது.source:athirvu

No comments:

Post a Comment