வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் அடுத்த ஆண்டு
முதல் திருவள்ளுவர் பிறந்த தினம் கொண்டாடப்படும் என்று மத்திய மனித வள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால் அதில் பேசப்படும் மொழிகள், கலாசாரம் மதிக்கப்பட வேண்டும். நாகரிகமும், உறவுகளும் வலுப்பெற மொழிகள் தடையாக இருக்கக் கூடாது. அவை பாலமாக இருக்க வேண்டும். மொழி என்பது எழுத்துகளையும், வார்த்தைகளையும் மட்டுமே கொண்டது அல்ல. அது ஒரு சமுதாயத்தின் நாகரிகம், உணர்வுகள், வண்ணங்கள், கலைகள், கலாசாரம் ஆகியவற்றின் பிரதிபதிலிப்பாகும்.
இந்தியாவின் சிறந்த அறிவாற்றலையும் அடையாளத்தையும் உலகம் முழுவதும் பிரதிபலிக்கும் வகையில் தமிழ் போற்றப்படுகிறது. "பூமியின் நினைவுகள்' என்ற பதிவை யுனெஸ்கோ அமைப்பு சேகரித்த போது, இந்தியாவின் அடையாளமாக "தமிழ்' மொழியை 2005-இல் தேர்வு செய்தது. அப்படிப்பட்ட தமிழ் மொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் போல விளங்குகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் வாழ்ந்தவர் திருவள்ளுவர். உலகம் போற்றும் பொதுமறையை அவர் தமிழ் மொழியில்தான் வழங்கினார். அதன் பெருமையையும், பயனையும் உணர்ந்த உலக நாடுகள் பலவும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை அவற்றின் தாய்மொழிகளில் மொழி பெயர்த்து தங்கள் குடிமக்களுக்குக் கற்பித்து வருகின்றன.
ஆனால், வட மாநிலங்களின் பல நகரங்களுக்கு நான் செல்லும் போது அங்குள்ள இளைய தலைமுறையினரிடம் "திருவள்ளுவரை தெரியுமா? திருக்குறளை படித்தீர்களா?' என்று கேட்பேன். ஆனால், "அது என்னது?' என்று அவர்கள் வியப்புடன் என்னிடம் கேட்கின்றனர். இது துரதிருஷ்டவசமானது.
நம் நாட்டில் குறிப்பாக வட மாநிலங்களில் வால்மீகி, துளசிதாஸ் ஆகியோரை மட்டும் நாம் மொழிப் புலமை வாய்ந்தவர்களாகப் போற்றுகிறோம். அவர்கள் மட்டுமே இந்தியாவின் அடையாளம் அல்ல. திருவள்ளுவர், கண்ணகி, சுப்பிரமணிய பாரதி போன்றோரைப் பற்றி குறிப்பிடாமல் இந்தியாவின் அடையாளத்தை நம்மால் முன்னிலைப்படுத்த முடியாது. எனவே, தமிழை கௌரவிக்கும் வகையிலும் திருக்குறளின் பெருமையை இந்தியர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் "திருவள்ளுவர்' பிறந்த நாளை அடுத்த ஆண்டு முதல் அனைத்து வட மாநில பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும். இப்போன்ற நடவடிக்கைகள்தான் தென்னகத்துக்கும் வடக்குக்கும் இடையிலான பாலத்தை வலுப்படுத்தும்' என்றார் தருண் விஜய்.
முன்னதாக, தருண் விஜய் திருக்குறள் குறித்து பேசத் தொடங்கும் போது "தமிழ் அன்னைக்கு முதல் வணக்கம்' என்று தமிழில் கூறி, ஹிந்தி மொழியில் உரையை வாசித்தார். இதேபோல உரையின் இடையே, திருக்குறளின் முதலாவது குறளான
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'
என்று கூறி திருவள்ளுவரின் சிறப்பை விளக்கினார்.
உறுப்பினர்கள் ஆதரவு: அவர் பேசி முடித்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், கே.ஆர். அர்ஜுனன், டாக்டர். மைத்ரேயன், டி. ரத்னவேல், விஜிலா சத்யானந்த், ஏ.கே. செல்வராஜ், எஸ். முத்துக்கருப்பன், திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் "தங்களையும் தருண் விஜய் கோரிக்கையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்று அவையில் பதிவு செய்தனர்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் வர்மா, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் அகமது ஹசன், காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோரும் தருண் விஜய் முன்வைத்த கோரிக்கையை மேஜையைத் தட்டி வரவேற்றனர். இதைப் பார்த்த அவையில் இருந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தருண் விஜய் கோரிக்கையை ஆமோதிக்கிறேன் என்று கூறினார்.
ஸ்மிருதி இரானி உறுதி: பின்னர் மாநிலங்களவை அலுவல் முடிந்ததும் தருண் விஜயை தனது அலுவலகத்துக்கு வரவழைத்த ஸ்மிருதி இரானி, "திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் நானும் அறிந்துள்ளேன். நாம் செய்யத் தவறியதை நாடாளுமன்றத்தில் அருமையாக சுட்டிக்காட்டி உணர்த்தியுள்ளீர்கள். உங்கள் கோரிக்கைப்படியே அடுத்த ஆண்டு முதல் வட மாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவரின் பிறந்த நாளைக் கொண்டாட உத்தரவிடுகிறேன்' என்றார்.
வாழ்த்து: இதற்கிடையே, தில்லி தமிழ் சங்கம் சார்பில் பொதுச் செயலர் கண்ணன், தில்லி முத்தமிழ் பேரவைப் பொதுச் செயலர் இரா. முகுந்தன், கே.எம்.எஸ். கலை உலகம் சார்பில் முத்துசாமி ஆகியோர் தமிழின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்காக தருண் விஜய்யை வெள்ளிக்கிழமை மாலையில் தொடர்பு கொண்டு நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
source:denamani
No comments:
Post a Comment