Monday, December 22, 2014

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில் மார்ச் 25ம் நாள் சிறிலங்கா குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் !

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா குறித்த விசாரணைகளின் அறிக்கை வரும் மார்ச் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர், ஜெனிவாவில் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் நாள் தொடக்கம் 27ம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடர் குறித்த உத்தேச நிகழ்ச்சி நிரலை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ளது.

இந்த உத்தேச நிகழ்ச்சி நிரலிலேயே மார்ச் 25ம் நாள்  சிறிலங்கா குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படடுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் அறிக்கையே இந்தக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.source:pathivu

No comments:

Post a Comment