Wednesday, December 24, 2014

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இன்று காலமானார்!

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் உடநலக்குறைவு காரணமாக தனது 84 வயதில் சென்னை மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.
சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும் அவரின் உடல் நிலை மோசமடைந்ததைத் தொடந்து அவர் இன்று  மாலை 7 மணியளவில்மரணமடைந்துள்ளார்.
1960களில் தனது திரைப் பயணத்தை துவக்கிய கே பாலச்சந்தர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்படும் கே.பாலச்சந்தர், 'நீர்க்குமிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார்.

பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் மற்றும் ருத்ரவீணா ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தேசிய விருதுகளை பெற்றுத்தந்தது. லைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றவர் கே.பாலசந்தர். இவருக்கு சென்னைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளார்கள்.

No comments:

Post a Comment