Saturday, December 06, 2014

இலங்கை ராணுவ அதிகாரியை கைது செய்ய வேண்டும்: தென்னாப்பிரிக்க அரசிடம் தமிழர்கள் கோரிக்கை

First Published : 06 December 2014 12:10 AM IST
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இலங்கை ராணுவ உயரதிகாரி ஒருவரை போர்க் குற்றத்துக்காக கைது செய்யும்படி, அந்த நாட்டில் வாழும் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை ராணுவ உயரதிகாரியான ஜெனரல் ஸ்ரீலால் வீரசூரிவா என்ற அந்த அதிகாரி, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கிறிஸ்துவ ராணுவத்தினருக்கான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அந்த நாட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், 1990-களில் இலங்கை ராணுவ படைப்பிரிவு தளபதியாக இருந்தபோது அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது தென்னாப்பிரிக்க வாழ் தமிழர்கள் கூட்டமைப்பு (எஸ்.ஏ.டி.எஃப்.) குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டுக் குற்றங்களுக்கான தென்னாப்பிரிக்க சிறப்புப் பிரிவிடம் ஜெனரல் ஸ்ரீலால் வீரசூரிவாவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளோம்.
இலங்கையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் தென்னாப்பிரிக்க அரசு, சர்வதேச சட்டப்படி அவரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்.ஏ.டி.எஃப். அமைப்பு கூறியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 60 லட்சம் தமிழர்கள் எஸ்.ஏ.டி.எஃப். அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
source:denamani
Sri Lankan army officer to be arrested: the South African government to request the Tamils

By dn, Johannesburg

First Published: 06 December 2014 12:10 AM IST

Someone to go to South Africa and Sri Lanka Army officer arrested for war crimes, the government requested that the Tamils in the country.

The officer of the Sri Lankan military superior, General ShriLal viracuriva, South Africa will be held in the country to attend a conference on the Christian army was gone.

In this case, the Sri Lankan military in 1990, he was in command of the regiment was involved in human rights violations on the South African Federation of Tamils (esetiehp.) Has been charged.

He said in a statement released by the organization: UAE foreign Crimes Special Division have filed war crimes charges against Gen. ShriLal viracuriva.

Subjected to persecution in Sri Lanka's Tamils has always supported the South African government, under international law to investigate esetiehp his immediate arrest. Agency said.

  SATF 60 laksTamils of Indian origin. Are members of the organization.

TRANSLATED:GOOGLE

No comments:

Post a Comment