Friday, December 05, 2014

தூக்கி வீசப்பட்டது செங்கோல்! இன அழிப்பு பிரேரணையினை முடக்க சீ.வி.கே முயற்சி!!

வடமாகாணசபையில் தொடரும் இனஅழிப்பு தொடர்பான பிரேரணையினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மறுதலித்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த செங்கோலை மற்றொரு மாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் தூக்கி வீசியுள்ளார்.

சிவாஜிலிங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட இனஅழிப்பு தொடர்பான பிரேரணையினை ஜனாதிபதி தேர்தலின் பின்னராக விவாதிக்கலாமென முதலமைச்சர் க.விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்த நிலையில் அதனை சபை முன்பதாக வாக்கெடுப்பிற்கு விட கே.சிவாஜிலிங்கம் கோரியிருந்தார். எனினும் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையினை ஒத்திவைப்பதாக தெரிவித்து வெளியேற முற்பட்டிருந்த நிலையினில் கோபமுற்ற கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசினார்.


முன்னதாக தொடரும் இன அழிப்பு தொடர்பான பிரேரணை கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணை முன்மொழியப்பட்டு அது ஏற்று ஆமோதிக்கப்பட்டிருந்தது. பிரேரணை தொடர்பில் எவருடையதுமான ஆட்சேபனை உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்ட போது எதிர்கட்சிகள் உள்ளிட்ட எவையுமே ஆட்சேபித்திருக்கவில்லை. பிரேரணைக்கு ஆதவாக கூட்டமைப்பு உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன், விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் சித்தார்த்தன் போன்றவர்களும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையினில் குறித்த பிரேரணையினை தான் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் திருத்தங்களை செய்தபின்னர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விவாதிக்கலாமெனவும் முதலமைச்சர் கருத்து தெரிவித்தார்.

எனினும் அதனை நிராகரித்த கே.சிவாஜிலிங்கம் வாக்கெடுப்பிற்கு விடுமாறு கோரினார்.அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையினை ஒத்திவைப்பதாக தெரிவித்து வெளியேற முற்பட கோபமுற்ற சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசியெறிந்தார்.
கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக இழுபறிப்பட்டு செல்லும் அப்பிரேரணையினை பொதுவாக்கெடுப்பிற்கு விடுமாறு எதிர்கட்சி தலைவர் தவராசா மற்றும் ஈபிடிபி உறுப்பினர் தவநாதன் ஆகியோரும் குரல் கொடுத்தனர்.
ஒருவாறாக தப்பித்து ஓடிய பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தனது அறையினுள் பதுங்கிக்கொண்டார்.

No comments:

Post a Comment