Tuesday, December 30, 2014

சிங்களத்தின் தேசிய தலைவர் மண் கவ்வுவார் ? அமெரிக்காவின் தொழில் நுட்ப்ப விளையாட்டு ..

சிங்களத்தின் தேசிய தலைவர் என்று பலரால் வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ, தோல்வியின் விளிம்பில் உள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரங்களில் மகிந்தருக்கு செல்வாக்கு இல்லை, ஆனால் பாமர மக்கள் மத்தியிலும், மற்றும் கிராமப் புறங்களிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளதாக இது நாள் வரை கூறப்பட்டு வந்த்து. ஆனால் தற்போது கிடைக்கப்பெறும் தகவல்களின் படி, மகிந்தரின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக பேஸ் புக் ஊடாக பல தகவல்கள் மகிந்தருக்கு எதிராக பரிமாறப்படுவதன் ரகசியம் என்ன ? என்று தெரியாமல் அலரி மாளிகை குழம்பிப்போய் உள்ளது. பேஸ் புக் இணையத்தை தற்காலிகமாக தடை செய்வது குறித்து கூட, அலரி மாளிகையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மைத்திரி செல்லும் இடங்களில் எல்லாம், மகிந்தவின் குண்டர்கள் பிரச்சனை கிளப்புவது பரவலாக நடைபெற்று வருவது, உடனுக்கு உடன் பேஸ் புக்கில் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு அதுதொடர்பான புகைப்படங்கள் கூட உடனே வெளியாகி விடுகிறது. பல நூற்றுக்கணக்கான சிங்கள பெயர்களில் திறக்கப்பட்டுள்ள பேஸ் புக் கணக்குகள் ஊடாகவே மகிந்தருக்கு எதிரான இந்த பாரிய பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 26ம் திகதி அன்று முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்காவையும் ஹிருனிக்காவையும் குறிவைத்து பேருவளையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் அதிஷ்டவசமாக தப்பிவிட்டார்கள். அது ஒருபுறம் இருக்க, இத்தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் பேஸ் புக்கில் சில நிமிடங்களில் எல்லாம் அப் டேட் செய்யப்பட்டு விட்டதாம்.
மகிந்த தனது அரசின் ஊடகங்களை பாவித்து, பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுகிறார். ஆனால் மக்களுக்கு எதிர் தரப்பினர் சொல்லும் கருத்துக்களும் சமூக வலையத்தளங்கள், மற்றும் இன்ரர் நெட் ஊடாகவும் சென்றடைகிறது, என்பதனை மகிந்த ராஜபக்ஷ சற்றும் எதிர்பார்கவில்லை. எகிப்த்து மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் எப்படி எழுச்சி ஏற்பட்டு செல்வாக்கு மிக்க தலைவர்கள் வீட்டுக்குச் சென்றார்களோ, அதுபோன்ற ஒரு நிலை இலங்கையில் வரலாம் என்று எதிர்பார்கப்படுகிறது. எகிப்த்தில் நடந்த புரட்சிக்கு வித்திட்டதே பேஸ் புக் ஆகும். இதன் பிண்ணனியில் அமெரிக்கா இருந்தது என்பதனை எவராலும் மறுக்கவும் முடியாது. அதுபோன்று தற்போது இலங்கையில் நடக்கும், இந்த பரப்புரைகளுக்கு பின்னால் சக்திவாய்ந்த நாடு ஒன்று உள்ளது.
மேலும் தற்போதைய நிலவரப்படி, மைத்திரி பால சிறிசேனா 57 % வாக்குகளால் முன்னணியில் உள்ளார் என்று, இந்த சக்திவாய்ந்த நாடு கணக்கிட்டு தனது தலைமைக்கு செய்தி அனுப்பியுள்ளது என்று, ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
8ம் திகதி நள்ளிரவு முதல், தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு மணி நேரமும் அதிர்வு இணையத்தில் அப்-டேட் செய்ய இருக்கிறோம். மாகாண ரீதியில் உடனுக்கு உடன் முடிவும் வெளியாகும். அதுவரை அதிர்வு இணையத்தின் செய்திகளோடு இணைந்திருங்கள்.source:athirvu

No comments:

Post a Comment