Wednesday, January 14, 2015

புலிகளின் விமானம் போல ராஜபக்ஷவின் விமானம்: இதோ வீடியோ இணைப்பு !



முன்னாள் அதிபரும் இன் நாள் அரசியல் அநாதையுமான, மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருக்கு சொந்தமானதென கருதப்படும், மறைத்து வைக்கப்பட்ட இரண்டு ஆசனங்களை கொண்ட சிறிய ரக விமானமொன்று மீட்கப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் வைத்திருந்த சிலின் 143 ரக விமானத்தை சேர்ந்ததாகும் என்று கூறப்படுகிறது.
நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறியரக விமானம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறியரக விமானமானது, மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனால் கொள்வனவு செய்யப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, வெளிக்கள ஒளிபரப்புக்கு தேவையான உபகரணங்கள் சிலவும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், இன்று மதியம் ஒரு அனாமதேய தொலைபேசி பொலிஸ் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு சென்றுள்ளது. அதில் பேசிய நபர் ஒருவரே மேற்கண்ட விபரங்களை பொலிசாருக்கு சொல்ல, அவர்கள் உடனே சென்று விமானத்தை கைப்பற்றியுள்ளார்கள். இனி வரும் காலங்களில் எவர் எவர் எதனை எல்லாம் காட்டிக்கொடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை. source:athirvu

No comments:

Post a Comment