Tuesday, January 20, 2015

அமெரிக்க சட்டத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்ஷ தண்டிக்கப்படுவார் – அமெரிக்க சட்டத்தரணி தெரிவிப்பு

அமெரிக்க சட்டத்திட்டங்களின் படி கோட்டாபய ராஜபக்ஷ யுத்தக் குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 த நியுயோக் ரைம்ஸ் பத்திரிகைக்கு, அமெரிக்காவின் சட்டத்தரணி ரியான் குட்மென் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1996ம் ஆண்டு அமெரிக்காவின் யுத்தகுற்ற சட்டத்தின் படி, அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படலாம்.

இந்த சட்டத்தின் படி அமெரிக்காவின் பிரஜை ஒருவர் எந்த நாட்டில் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.

 கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்சில் வசித்து வந்ததுடன், லொயோலா சட்ட கல்லூரியில் கணனி இயக்குனராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணையை அமெரிக்காவே முன்வந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், இதனை சிறிலங்கா ஒருபோதும் செய்யாது என்றும் அவர் தமது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
source:pathivu

No comments:

Post a Comment