Monday, January 19, 2015

ராஜபக்ஷ எங்கே பணத்தை முடக்கினார்: இதோ தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது !


முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சகாக்கள் சீஷெல்ஸ் நாட்டில் சொத்துக்களை முடக்கி வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பிரதி பொருளாதார அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் அமைச்சர் ஹர்ஸ டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். பல்வேறு வழிகளில் இந்த சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் கணக்காய்வாளர்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் கூட விசாரணை நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் ஒத்துழைப்பையும் இதற்காக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார். கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீட்கும் திட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சீஷெல்ஸ் நாட்டு மக்களின் மொத்த சனத்தொகை 90,000 பேர் என்ற போதிலும், கடந்த ஆண்டில் மட்டும் 3000 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சீஷெல் நாட்டில் உள்ள எவரிடம் இந்த அளவு பணம் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை அரசியல்வாதிகள் சீஷெல்ஸ் ஊடாக சுவிஸ் வங்கிகளில் சொத்துக்களை பதுக்கியிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் கொள்ளையிடப்பட்ட பணம் இவ்வாறு சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். வெறும் 90,000 மக்கள் சனத்தொகையைக் கொண்ட சீஷெல்ஸ் நாட்டிற்கு, மிஹின் எயார் விமான சேவை நேரடி விமான சேவையை கடந்த ஆண்டு ஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஏன் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது ? 50 பயணிகள் கூட சீஷெல்ஸ் நாட்டில் இருந்து இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மஹிந்த ராபஜக்ஸவின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள். இனி என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ.. பொறுத்திருந்துதான் பார்கவேண்டும்.

No comments:

Post a Comment