Saturday, January 03, 2015

சுப்பிரமணியன் சுவாமி மூலம் இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடிய மகிந்த ராஜபக்சே!

சுப்பிரமணியன் சுவாமி மகிந்த ராஜபக்சே
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கமான பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, இந்திய – சிறிலங்கா உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அந்தப் பயணம் தொடர்பாகவே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் அவர் பேச்சு நடத்தியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான சுப்பிரமணியன் சுவாமி, சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அஜித் டோவலுடன் சிறிலங்கா விவகாரங்கள் குறித்து பேசியுள்ளது புதுடெல்லி அரசியல் வட்டாரங்களில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலில் கடும் போட்டியைச் சந்தித்துள்ள நிலையில், அவர் சுப்பிரமணியன் சுவாமி மூலம் இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியிருப்பதாகவும், கூறப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நம்பிக்கையானவரான அஜித் டோவல் மூலம், மகிந்த ராஜபக்சவின் கோரிக்கையை சுப்பிரமணியன் சுவாமி இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.source:pathivu

No comments:

Post a Comment