Saturday, February 07, 2015

ஐ.நா நோக்கிய விடுதலைச்சுடர் 3வது நாள் போராட்டம்

ஐ.நா நோக்கி பிரித்தானியாவிலிருந்து பெப்ரவரி 4ஆம் நாள் புதன்கிழமை ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் இன்று பெப்ரவரி 6ஆம் நாள் வெள்ளிக்கிழமை 3ஆவது நாளாகத் தொடர்கிறது. தமிழீழம் ஒன்றே தமிழருக்கான ஒரே தீர்வென உறுதியோடு பயணிக்கும் தமிழ் மக்களால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலகநீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் (தமிழீழத்திலும்) தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.



வடமேற்கு லண்டனைச் சேர்ந்த திரு கணேசதாஸ் விகர்ணன் அவர்கள் விடுதலைச்சுடரினையும், வடமேற்கு லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு கோபிநாத் நித்தியானந்தம் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியையும் ஏந்தியவாறு செல்ல, தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர் திரு கணேசலிங்கம் சதாபாலன், விடுதலைச்சுடர் போராட்டத்தின் பிரித்தானிய ஒருங்கிணைப்பாளர் திரு உதயனன், மற்றும் வடமேற்கு லண்டனைச் சேர்ந்த தெய்வேந்திரம் அனுஜன் ஆகியோர் இம்மூன்றாம் நாள் விடுதலைச்சுடர் போராட்டத்தை இன்று பெப்ரவரி 6ஆம் நாள் தொடர்ந்தனர்.


West Harrow தொடரூந்து நிலையம் ஊடாக பயணத்தைத் தொடர்ந்த போராட்டச்செயற்பாட்டாளர்கள், தொழிற்கட்சியைச் சேர்ந்த Harrow West நாடாளுமன்ற உறுப்பினர் Gareth Thomas, Ealing Sotuhall நாடாளுமன்ற உறுப்பினர் Virendra Sharma ஆகியோரைச் சந்தித்து மனுக்களை கையளித்ததனையடுத்து Rayners Lane, Northolt, Lady Margaret Road, ஊடாகச் சென்று Southall ல் காலைப் போராட்டத்தை இடைநிறுத்தினர்.


இப்போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிய சிறுவெளியீடுகளும் இந்த பயணத்தில் மக்களிடம் கொடுக்கப்பட்டன. பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் ஆரம்பமான இன்றைய விடுதலைச்சுடர் போராட்டம் Hayes, Ruislip ஆகிய பகுதிகள் உட்பட பல இடங்கள் ஊடாகச் சென்று Northwood Hill என்னும் இடத்தில் மாலை 6 அளவில் நிறைவு பெற்றது. கடுங்குளிரில் இப்போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுடன் அவ்வப்பகுதி மக்களும் இணைந்து கொண்டனர். மாலை நேரச்சுடர்ப்பயணத்தின் போது Hayes, Harlington பகுதிக்குரிய நாடாளுமன்ற உறுப்பினரான தொழிற்கட்சியைச் சேர்ந்த திரு John McDonnell அவர்களுக்கும் Northwood பகுதிக்குரிய நாடாளுமன்ற உறுப்பினரான Conservative கட்சியைச் சேர்ந்த திரு Nick Hurd அவர்களுக்கும் மனுக்கள் சேர்ப்பிக்கப்பட்டன.

source:pathivu

No comments:

Post a Comment