Thursday, February 05, 2015

ஆரம்பமானது ஜெனீவா நோக்கிய "விடுதலைச் சுடர்" போராட்டம்

தமிழினக் கருவறுப்புத் தாண்டவத்தை பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றி வரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழர்கள் உலகெங்கும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி விடுதலைச் சுடர் ஏந்திவாறு கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஆரம்பமானது.
 
மாலை 4 மணிக்கு இல 10, Downing Street முன்பாகக் கொட்டொலிப் போராட்டத்துடன் ஆரம்பமான  இவ்விடுதலைச் சுடர் ஏந்திய கவனயீப்புப் போராட்டம் மாலை 6 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.


தொடர்ந்து இம்மாதம் 14ஆம் நாள் வரை பிரித்தானியாவின் பல பகுதிகள் ஊடாக இவ்விடுதலைச் சுடர் ஏந்திச் செல்லப்பட்டு பின்னர், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கூடாக மார்ச் திங்கள் 16 ஆம் நாள் ஜெனீவாவை சென்றடையவுள்ளது.
 
வடமேற்கு லண்டன் மாவீரர் செயலகப் பொறுப்பாளரும் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் பெரியதம்பியின் மகனுமாகிய திரு.பிறேம் அவர்கள் விடுதலைச்சுடரை ஏற்றிவைக்க, பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தென்மேற்கு லண்டன் செயற்பாட்டாளர்
திரு சிவானந்தம் செல்வக்குமரன் அவர்கள் விடுதலைச் சுடரேந்தி போராட்டத்தை முன்னெடுத்தார்.
தொடர்ந்து விடுதலைச்சுடரேந்திய பேரணி வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற சதுக்கத்தை நோக்கி நகர்ந்தது. விடுதலைச்சுடரேந்தி திரு செல்வக்குமரன் நடந்து செல்ல, கொட்டொலிகளை எழுப்பியபடி கைகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு மக்கள் நடந்து சென்றனர்.



No comments:

Post a Comment