Monday, February 16, 2015

போர்குற்றவாளிக்கு “ராணுவ ஆராய்ச்சியாளர்” பட்டம் கொடுக்கும் பாஜக அரசின் அயோக்கியத்தனத்தை தோலுரிப்போம்!

தமிழீழ விடுதலை போராட்டத்தை சிங்களம் சர்வதேசத்தின் துணை கொண்டு 1,46,679 அப்பாவிகளை கொன்றொழித்து 2009 ல் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் தற்காலிக தடை உண்டாக்கியதும் நாம் அறிவோம்.

ஆனால் 2009 க்கு பின்னான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பது சிங்கள-இந்திய-அமெரிக்க-சீன-பன்னாட்டு கூட்டு சதியின் காரணமாக தமிழ் மக்களின் கவனத்தை முழுதாக கவராமல் போனது துரதிர்ஷ்ட்டம்.

அதிர்ச்சி தரும் ஆவணங்களை அடிப்படையாக கொண்டு கொதித்தெழுவதுஇ பின்னர் மெல்ல அடங்கிப்போவது என்ற தவறான அரசியல் போராட்ட கலாச்சாரமும் இதற்கு காரணமாகியது. உண்மை குற்றவாளிகளை விடுத்து தங்களின் தனிப்பட்ட அபிலாசைகளுக்கு ஏற்றார்போல அவ்வபோது எதிரியை மாற்றி மாற்றி மக்களையும்இ மாணவர்களையும் குழப்பிய சில நபர்களும்இ இயக்கங்களும் இதில் பங்குதாரர்களே.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வான தமிழீழ தேசிய விடுதலையை துண்டாடிய கத்தி ‘சிங்கள ராணுவம் ‘ என்றால்இ ஷவேந்திர சில்வா தலைமையிலான ’58 ஆவது படைப்பிரிவே’ அந்த கத்தியின் கூர்முனை என்றால் அது மிகையாகாது.

உதாரணமாகஇ 2009 ஏப்ரல் மாதம் ‘பாதுகாப்பு பகுதி’ என்று அறிவித்து அப்பாவி தமிழ் மக்களை நயவஞ்சகமாக வரவைத்து 40இ000 அப்பாவிகளை பல்குழல் குண்டுஇ கொத்து குண்டுஇ ரசாயன குண்டு உட்பட உலகில் தடைசெய்யப்பட்ட பல்வேறு வகையான ஆயுதங்களை கொண்டு இனப்படுகொலை செய்தது இந்த 58 ஆவது பிரிவு தான்.மேலும் 2009 மே 17 அன்று வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தால் ஏற்றுக்கொள்வதாக பொய்யான வாக்குறுதி கொடுத்துஇ சரணடைய வந்த தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் மற்றும் ராணுவ பிரிவு தலைவர்களை வேனுடன் குண்டு வைத்து படுகொலை செய்த கொடூர புத்தி கொண்டது இந்த 58 ஆவது படை பிரிவு தான்.

(படிக்க : http://lankaenews.com/news/123/en)

ஒட்டுமொத்தமாக சுய ஒழுக்கம் அற்ற ஒரு இனவெறி ராணுவமாக சிங்கள ராணுவம் இருக்கிறது என்றால்இ அதில் அதிகபட்ச ஒழுங்கீனத்தை கொண்டதும்இ சொல்ல நாகூசும் உலகமகா பாதகங்களை செய்ததும் இந்த 58 ஆவது படையணி ஆகும். ஒரு வகையில் தமிழீழ போராட்டம் பின்னடைவை கண்டதற்கு இந்த படையணியும் அதை தலைமை ஏற்று வழி நடாத்திய ஷவேந்திர சில்வாவும் முக்கிய பொறுப்பாவார்கள்.

 எனவே தான் தமிழ் இனப்படுகொலை விவகாரத்தில் பன்னாட்டு அளவில் அழுத்தங்களை கொடுக்கும் ‘இன்னர் சிட்டி பிரஸ்’ என்ற ஊடகம் ஷவேந்திர சில்வாவின் இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்கள் பற்றி தெளிவான நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் தான் சிங்கள அரசும்இ பவுத்த சிங்கள பிக்குகளும்இ இனவெறி கொண்ட சிங்களர்களும் இந்த ஷவேந்திர சில்வாவை தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்றொழித்த காரணத்தினால் தங்கள் ஈடிணை இல்லாத நாயகனாக கொண்டாடி வருகின்றனர்.

இலங்கை குடியரசின் தலைவராகவும்இ முப்படைகளின் தலைமை ஆணையாளராகவும் இருந்த ராஜபக்சே உட்பட அரசின்இ ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் குற்றவாளி பட்டியலில் உலக அரங்கில் வைக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான தனித்தனியான நெருக்கடிகளும் அதிகமாகி வருகின்றன. இந்த தலைமைகளை காக்காவிட்டால் ராணுவத்தின் மொத்த அயோக்கியத்தனங்களும் அம்பலப்பட்டு நிற்கும் என்பதால் சிங்கள அரசு இந்த அதிகாரிகளை பாதுகாப்பதில் உச்சபட்ச கவனம் செலுத்தியது.

இதில் மிக முக்கியமான நபரே 58 ஆவது படைப்பிரிவின் தலைவராகிய இந்த ஷவேந்திர சில்வா.

ஷவேந்திர சில்வாவை பாதுகாப்பதன் மூலம் தங்கள் மீதான இனப்படுகொலை மற்றும் போர்குற்ற விசாரணைகளை நீர்த்து போக செய்வதே சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

இதன் முதல் பகுதியாக பன்னாட்டு அரங்கில் கைது மற்றும் விசாரணைகளில் இருந்து தப்புவிக்க ‘ராஜரீக பாதுகாப்பு’ வழங்கும் ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர துணை பிரதிநிதியாக போர்குற்றவாளியான ஷவேந்திர சில்வாவை இலங்கை அரசு நியமிக்கிறது. ராணுவ தளபதியாக இருக்கும் ஒரு நபர் இந்த பொறுப்பில் அதுவரை அமர்த்தப்பட்டதில்லை என்பதை கவனித்தாலே இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்பது தெளிவாகும்.

காண்க : http://nypost.com/2010/11/21/war-criminal-gets-a-un-job/

இதை தொடர்ந்து ஐநாவின் ‘அமைதி காக்கும் நடவடிக்கைகளின்’ சிறப்பு ஆலோசனை குழு உறுப்பினராக இலங்கையின் முயற்சியில் 2012 ஆம் ஆண்டு இவர் முதலில் பணி அமர்த்தப்பட்டு பின்னர் உலக அரங்கில் எழுந்த கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் போர்குற்ற ஆவணங்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக இவர் அந்த பொறுப்பில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

இத்தகைய குற்ற பின்னணியை கொண்ட ஷவேந்திர சில்வாவை தான் இந்திய அரசு உலக அளவில் புகழ்பெற்ற தனது தனிச்சிறப்பு மிக்க தேசிய பாதுகாப்பு கல்லூரியின் ‘பாதுகாப்பு மற்றும் போர் உத்திகள்’ என்ற ஆ. Phடை பட்ட படிப்பில் சிறப்பு அழைப்பாளராக இந்த ஆண்டு சேர்த்துக்கொண்டுள்ளது. இந்த பட்டப்படிப்பை சென்னை பல்கலைகழகம் அங்கீகரிக்கிறது.

 (படிக்க: http://ndc.nic.in/Site/FormTemplete/frmNewTemplate.aspx…)

இதை சாதாரண கல்வி தகுதியாக பார்க்க முடியாது . ஏனென்றால் இலங்கை ராணுவத்தின் அதிஉயர் ஆணையாளர் ஆவதற்கு இந்த பட்டபடிப்பு ஒரு முக்கிய தகுதி ஆகிறது. அதன்படி ஊழஅஅயனெநச பதவிக்கு உயர்த்தப்பட்டால் ஷவேந்திர சில்வாவுக்கு உலக அளவிலான விசாரணைகளில் இருந்து முன்பைவிட பன்மடங்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும். இந்தியாவும் இந்த போற்குற்றவாளியை அங்கீகரித்தது போல் ஆகும்.

‘இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்’ என்று சிங்கள ராணுவம் சொன்னதையும்இஅந்த போரின் போற்குற்றவாளிகளுக்கு ‘உத்தமர்’ பட்டம் இந்தியா முனைந்து வழங்குவதையும் நாம் இங்கே பொருத்திப்பார்க்க வேண்டும்.

ஷவேந்திர சில்வாவுக்கு வழங்கப்படும் இந்த பட்டம்இ தமிழ் மக்களின் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கியமான அங்கமாக நாம் கருதவேண்டும். இது போல போர்குற்றவாளிகளுக்கு இந்தியா பன்னாட்டு அரங்கில் பாதுகாப்பும்இ அங்கீகாரமும் பெற்றுத்தருவதை நாம் ஒன்றுகூடி போராடி தடுத்து நிறுத்த வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து தமிழ் தேசிய அமைப்புகள்இ தமிழர் ஆதரவு இயக்கங்கள்இ கட்சிகள்இ ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து ஒரு வீரியம் மிக்க போராட்டம் விரைவில் நடத்தப்படும். இது தொடர்பான முதற்கட்ட ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

தமிழ் தேசியத்தின் மீதும்இ தமிழரின் சுயாட்சி உரிமை மீதும் நீங்கா பற்று கொண்ட தமிழ் சொந்தங்கள்இ தமிழகம் மற்றும் தமிழீழம் ஆகிய தமிழர் புலங்கள் வேற்றினத்தாரின் பிடியில் இருந்து விடுபட முனையும் இந்த முக்கியமான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

 ற்குற்றவாளி ஷவேந்திர சில்வாவிற்கான பயிற்சியை நிறுத்தி இந்தியாவை விட்டு உடனே வெளியேற்றவும்இ தமிழீழ தேசத்திற்கான பொதுவாக்கெடுப்பு கோரி இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் கோரும் இந்த போராட்டத்தின் நாள்இ நிரல்இ இடம் ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.
போராட்ட நாள் நோக்கி காத்திருங்கள் தாய்த்தமிழ் உறவுகளே! பதிவு இணைய செய்தி

சூர்ய பிரகாஸ்

No comments:

Post a Comment